மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்க.. அப்போ கவனமா இதை செய்யுங்க! இல்லைனா பெரிய பிரச்சினை ஆகிடும்! அலர்ட்
சென்னை: இப்போது மாத சம்பளம் வாங்கும் பெரும்பாலானோர் செய்யும் சிறு தவறால் அவர்கள் கடன் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த கடன் சுழலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போதும் கிரெடிட் கார்டை விட டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு பயன்பாடு தான் அதிகமாக இருக்கிறது என்ற போதிலும் இளைஞர்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அதிலும் குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் இளைஞர்கள் தான் இந்த கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த கிரெடிட் கார்டுகளுக்கு பல பயன்கள் இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் கூட புதைந்தே இருக்கிறது.
கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி எந்தவொரு பொருளையும் வாங்கும் போது நமக்குக் கூடுதலாக ஆஃபர் கிடைக்கிறது. மேலும், ஒரு பொருளை வாங்கி, அதிகபட்சம் 45 நாட்களுக்குப் பிறகு பணம் கொடுத்தால் போதும் என்பதால் இதுவும் கூட மாத சம்பளம் வாங்குவோருக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. என்ன தான் கிரெடிட் கார்டுகளில் ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் எனச் சலுகைகள் கொட்டி கிடந்தாலும் கூட இதில் சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது.
அதாவது கிரெடிட் கார்டு இருந்தாலே நாம் மிக எளிதாக அதிக தொகையைச் செலவழிக்க ஆரம்பித்துவிடுவோம். இதனால் நாம் கடன் சூழலில் சிக்கும் ஆபத்து இருக்கிறது. 45 நாட்களில் முழு தொகையைச் செலுத்தி விட்டால் கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி இல்லை. ஆனால், அதைச் செலுத்தத் தவறினால் அதிகபட்ச வட்டியைச் செலுத்த வேண்டி இருக்கும். இந்த ஆபத்துகளில் இருந்து எப்படித் தப்பிக்கலாம்.. கிரெட்டிட் கார்டை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
முதலில் பட்ஜெட்: முதலில் எப்போதும் பட்ஜெட் போடுங்கள்.. உங்கள் சம்பளம் என்ன, இதர வருமானம் என்ன என்பதை முழுமையாகக் கணக்கிடுங்கள். அதன் பிறகு மாதாந்திர செலவுகள் அனைத்தையும் பட்டியலிடுங்கள். வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால் உங்களுக்கே எவ்வளவு செலவு செய்யலாம் என்ற புரிதல் கிடைக்கும். வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். தொடர்ந்து உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்.. அவை பட்ஜெட்டை தாண்டி செல்வதில்லை என்பதை உறுதி செய்யுங்கள்.
இரண்டாம் பாயிண்ட்: அடுத்து உங்கள் செலவுகளை CUR எனப்படும் credit utilisation limitக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் கிரெடிட் கார்டு லிமிட் இருக்கும் தொகையை முழுமையாகச் செலவு செய்யக் கூடாது. அதாவது உங்கள் கிரெடிட் கார்டு லிமிட் ஒரு லட்ச ரூபாய் என்றால் முழுமையாக ஒரு மாதத்தில் ஒரு லட்ச ரூபாயைச் செலவு செய்யக் கூடாது. கிரெடிட் கார்டு லிமிட்டில் 30%க்குள் தான் செலவு செய்ய வேண்டும். இது உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், சிபில் ஸ்கோரையும் அதிகரிக்க உதவும்.
இது முக்கியம்: அடுத்து இதுதான் முக்கியமானது. பெரும்பாலானோர் தவறவிடும் இடமும் இதுதான். அதாவது 45 நாட்களுக்கு முழு தொகையையும் செலுத்தி விடுங்கள். இதில் விஷயம் என்னவென்றால் நீங்கள் முழு தொகையைக் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறைந்த தொகையைச் செலுத்தினால் போதும் என்பார்கள். இது பொதுவாக நீங்கள் செலவு செய்யும் தொகையில் 5%ஆக இருக்கும். ஆனால், தப்பித் தவறிக் கூட இந்த தவறை செய்துவிடாதீர்கள்.
எப்படியாவது முழு தொகையைச் செலுத்தி விடுங்கள். ஏனென்றால் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் நமக்கு அதிகபட்ச வட்டியைப் போடுவார்கள். மேலும் உங்கள் சிபில் ஸ்கோரும் குறையும். எனவே, முழு தொகையை உரியக் காலக்கெடுவுக்குள் செலுத்தி விடுங்கள்.
ரொக்கம் வேண்டவே வேண்டாம்: உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்க முடியும் என்றாலும் கூட முடிந்த வரை அதைச் செய்யாதீர்கள். இதனால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது என்ற போதிலும், நேரடியாகப் பணமாக எடுத்தால் அதற்கான கட்டணம் அதிகம். மேலும், நீங்கள் ரொக்கமாக எடுக்கும் நாளில் இருந்தே அதற்கான வட்டியையும் கணக்கிடத் தொடங்கிவிடுவார்கள். எனவே, அவசரநிலையில் தவிர, மற்ற நாட்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த ஆப்ஷன்: அடுத்து கிரெடிட் கார்டிலேயே தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஆப்ஷன் இருக்கிறது. அதாவது உங்கள் லிமிட் ஒரு லட்சமாக இருந்தாலும் கூட நீங்கள் செயலியில் சென்று செலவுகளை லிமிட்டை 20 ஆயிரமாகக் குறைக்கலாம். இதன் மூலம் மாதம் 20 ஆயிரம் மட்டுமே செலவு செய்ய முடியும். இதுவும் கூட தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். கிரெடிட் கார்டு பல பயன்களைத் தரும் என்றாலும் அதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் எளிதாக நம்மைக் கடன் வலையில் சிக்க வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications