சென்னை மக்களே.. மழை நீர் பைக் சைலன்சர் உள்ளே போகாமல் இருக்க இப்படி பண்ணுங்க!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் தான் மழைநீரில் டூவீலர் செல்லும்போது சைலன்சர் உள்ளே தண்ணீர் செல்லாமல் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில் தான் சென்னையில் நேற்று முதல் மழை பெய்யவில்லை. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் வெள்ளத்தில் கார்கள், ஆட்டோக்கள் அடித்து செல்லப்பட்டன. அதோடு டூவீலர்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் நுழைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னையில் மழை இல்லாவிட்டாலும் சாலையில் மழைநீர் என்பது தேங்கி உள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாகனங்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக டூவீலர்களை பொதுமக்கள் பயன்படுத்தி தொடங்கி உள்ளனர். இப்படி செல்லும்போஐ சைலன்சர் உள்ளே மழைநீர் சென்று டூவீலர்கள் சாலையிலேயே ஆப் ஆகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மெக்கானிக் கடைகள் தற்போது இல்லாததால் இதுபோன்ற பிரச்சனை வாகன ஓட்டிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் வேறு வழியின்றி அவர்கள் தங்களின் டூவீலர்களை மீண்டும் ஸ்டார்ட் செய்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மழைநீர் தேங்கிய பகுதியில் டூவீலரில் சென்றால் சைலன்சர் உள்ளே தண்ணீர் போகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ என்பது காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது காஞ்சிபுரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் 2 பேர் டூவீலரில் செல்கின்றனர். அந்த டூவீலரின் சைலன்சர் பகுதியில் வெள்ளை நிற பைப் மாட்டப்பட்டுள்ளது. அதாவது சைலன்சரில் இருக்கும் துளையில் வெள்ளை நிற பைப் மாட்டி ‛எல்' பெண்ட் மூலம் மேல்நோக்கி சுமார் 4 அடி உயரத்துக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தண்ணீரில் டூவீலர் சென்றாலும் கூட சைலன்சரில் தண்ணீர் செல்லாது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது நல்ல ஐடியாவாக இருக்கே என கூறி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications