DigiPin: தந்தி போல் முடிவுக்கு வரும் பின்கோடு.. தபால் துறையில் டிஜிபின் வாங்குவது எப்படி.. விவரம்
சென்னை: இந்தியாவில் தபால் துறையில் பின்கோடு என்பது முக்கிய அங்கமாக இருக்கிறது. குறிப்பிட்ட முகவரிக்கு தபாலை சேர்க்க உதவுகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் பின்கோடு உதவுகிறது. இந்நிலையில் தபால் துறையில் தந்தியை போல் 'பின்கோடு' சகாப்தமும் முடிவுக்கு வருகிறது. தபால்துறையில் 'டிஜிபின்' எனும் டிஜிட்டல் முகவரி திட்டம் அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் வீடு, கடைகளின் துல்லியமான முகவரியை அறியலாம். ஒவ்வொருவரும் டிஜிபின் முகவரியை வாங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைக்கு மொபைலை தாட்டினாலே தபால் மூலம் உங்களுடைய பார்சல் அல்லது கடிதம் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அந்த அளவிற்கு எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒரு பொருளை ஆன்லைனில ஆர்டர் செய்தால், அந்த பொருள் எங்கு இருக்கிறது. யார் டெலிவரி செய்தார்கள். அது கொரியர் செய்யப்பட்டது எப்போது, அந்த பொருள் பக்கத்தில் உள்ள ஊருக்கு எப்போது வருகிறது. ஊருக்கு எப்போது வந்துவிட்டது? உங்கள் ஏரியாவிற்கு எப்போது வருகிறது? என்ற விவரங்களை அறிய முடிகிறது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதால் இது சாத்தியம் ஆகிறது.

டிஜிபின் திட்டம்
அடுத்ததாக தபால் துறையும் தபால்கள் சென்றடைய வேண்டிய முகவரியையும் டிஜிட்டல் மயமாக்கி இருக்கிறது. 'டிஜிபின்' என்ற புதிய டிஜிட்டல் முகவரியை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக பின்கோடுகள் சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. தற்போது உள்ள பின்கோடுகள் சுமார் 10 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை உள்ளடக்கி இருக்கும். ஆனால் டிஜிபின் திட்டப்படி, வீடு, கடைகளின் முகவரியை மிக துல்லியமாக இருக்கும். ஒவ்வொரு தனிநபரின் வீடு, கடைகளுக்கென தனித்தனி டிஜிட்டல் முகவரியை கொண்ட 'டிஜிபின்' உருவாக்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் போல் செயல்படும் இந்த திட்டம், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இணையதள முகவரி
இதுகுறித்து தபால்துறை அதிகாரி கூறுகையில், 'டிஜிபின்' என்பது டிஜிட்டல் பின்கோடு தான். இந்திய தபால் துறையின் https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற பிரத்யேக இணையதளம் வழியாக தங்கள் வீடு, கடை, நிறுவனங்களின் டிஜிபின் முகவரியை ஒவ்வொருவரும் பெற முடியும்.
எப்படி டிஜிபின் பெறுவது
https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற பிரத்யேக இணையதளத்திற்கு போக வேண்டும். முன்னதாக நீங்கள் உங்கள் செல்போனில் 'லோகேஷன்' என்பதை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலே செல்போன் மூலமாக தங்கள் வீடு, கடைகளின் டிஜிபின் முகவரியை பெற்றுவிட முடியும். தங்கள் வீடு, கடைகளில் இருந்தபடி ஒருமுறை இந்த டிஜிபின் முகவரியை பெற்று கொள்ளலாம். அதையே தபால் மற்றும் பார்சலுக்காக பயன்படுத்த முடியும்.
ஆன்லைன் டெலிவரி
மேலும் அவசர உதவிகளான காவல், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவைக்கும் துல்லியமான இருப்பிடத்தை பயன்படுத்திட முடியும். அதேபோல் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் முகவரி கேட்டு அலையாமல் நேரடியாக வீட்டிற்கே வந்து டெலிவரி செய்ய இந்த திட்டம், பெரும் உதவியாக இருக்கும்.
டிஜிபின் யாருக்கு எல்லாம் நன்மை
டிஜிபின் மூலம் தபால்காரர் யாரும் இனி முகவரியை தேடி அலைய வேண்டியதே இருக்காது. மிக எளிதாக முகவரியை கண்டுபிடித்து வீட்டிற்கு அல்லது கடைக்கு வந்துவிடுவார்கள். இதன்மூலம் நேரம் குறையும். இந்த புதிய 'டிஜிபின்' 10 இலக்க எழுத்து மற்றும் எண் கலந்த குறியீடாக இருக்கும். அதேநேரம் இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் டிஜிபின் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே கிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படாது
அதேநேரம் டிஜிபின் குறிப்பிட்ட முகவரி தவிர அந்த முகவரியில் குடியிருக்கும் தனி நபரின் தனிப்பட்ட தரவு எதையும் சேமிக்காது. புவி நிலை குறியீடு அடிப்படையில் எழுத்து மற்றும் எண்களை கொண்ட குறியீட்டை மட்டுமே வழங்கும். ஒவ்வொருவரின் தனி உரிமையை இந்த அமைப்பு உறுதி செய்யும்" இவ்வாறு தபால்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications