வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட், பிற்பகல் வெளியாகும் +1 முடிவு.. ரிசல்ட்டை தெரிந்து கொள்வது எப்படி?
சென்னை: இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ரிசல்ட்டை எப்படி தெரிந்து கொள்வது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று ரிசல்ட்: இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ரிசல்ட்டை எப்படி தெரிந்து கொள்வது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுத்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேர்வின் போது பதிவு எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேபோல் உங்களின் பள்ளி சான்றிதழ்களில் பிறந்த தேதி இருக்கும். இதை வைத்தே உங்களின் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும்.
எத்தனை பேர் எழுதி உள்ளனர்?
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6 தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் இந்த தேர்வை 9, 38, 291 மாணவ, மாணவியர் எழுதினர்.
2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவு பெற்றது.
7,73,688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் அடக்கம்.
இந்த நிலையில் இன்று வெளியாகிறது 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகிறது.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications