சொத்து வரி செலுத்துவோர் 5% வட்டி தள்ளுபடி பெறுவது எப்படி? சென்னை மக்கள் அறியாத 3 ஹைலைட்ஸ்
சென்னை: சொத்து வரியை, சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 2 முறை அரசுக்குச் செலுத்துவதை ஒரு தேவையற்ற செலவாகவே பார்க்கிறார்கள். ஆனால், இந்த வரி ரசீதுக்கு பின்னால் இருக்கும் அதிகாரமும், சலுகைகளும் பலருக்கும் தெரிவதில்லை. அரசாங்க சட்டங்களின்படி, சொத்து வரி செலுத்துபவர்களுக்குப் பல்வேறு ரகசிய சலுகைகள் உள்ளன. இதில் மிக முக்கியமான 3 விஷயங்கள் சாமானியர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தருகிறது. அது என்ன தெரியுமா?
ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்படும் சொத்து வரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், குடியிருப்புகள், மற்றும் காலி மனைகள் என அனைத்து வகையான அசையா சொத்துகளுக்கும் இந்த வரி விதிக்கப்படுகிறது. இதில் உள்ள பிரதான அம்சம் என்னவென்றால், "முன்கூட்டியே வரி செலுத்தி லாபம் ஈட்டுதல்" ஆகும்.
சொத்து வரி நன்மைகள்
பெரும்பாலான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நிதியாண்டு தொடங்கிய முதல் 15 அல்லது 30 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தில் சொத்து வரியைச் செலுத்தினால், மொத்த வரித் தொகையில் 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை.
வெறும் வரி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசு தரும் இந்தத் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். வரி கட்டுவது ஒரு கடமை என்றால், அந்த வரியிலேயே தள்ளுபடி பெறுவது ஒரு புத்திசாலித்தனமான சேமிப்பாகும்.
இரண்டாவதாக, "சட்ட ரீதியான பாதுகாப்பு கவசம்"'... சொத்து வரி ரசீது என்பது வெறும் பணப் பரிவர்த்தனை ஆவணமல்ல. நீதிமன்றங்களில் அல்லது நிலம் தொடர்பான பிரச்சனைகளின் போது, ஒரு சொத்தின் Current Possession" அதாவது தற்போதைய சுவாதீனம்" உங்களிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க இருக்கும் மிக வலிமையான ஆதாரம் இதுதான்.
பட்டா சிட்டா ரசீதுகள்
பட்டா, சிட்டா போன்றவை உரிமையை சொன்னாலும், அந்த சொத்தை நீங்கள் தான் அனுபவித்து வருகிறீர்கள் என்பதற்கான நேரடிச் சாட்சி சொத்து வரி ரசீது ஆகும்.. ஒருவேளை உங்கள் சொத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டாலோ அல்லது எல்லைப் பிரச்சனைகள் வந்தாலோ, நீங்கள் முறையாகச் செலுத்திய வரி ரசீதுகளே உங்களை காப்பாற்றும் கவசமாக மாறும்.
மூன்றாவதாக, "அபராத வட்டி தவிர்ப்பு மற்றும் ஜப்தி பாதுகாப்பு"...அதாவது சொத்து வரியை தாமதமாக செலுத்தினால் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அபராத வட்டி (Penalty Interest) மாதம் தோறும் கணக்கிடப்படும். பல ஆண்டுகள் வரி கட்டாமல் இருந்தால், அசலை விட வட்டி தொகை எகிறி, இறுதியில் சொத்து ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படும்.
சலுகைகள், பயன்கள்
ஆனால், நிலுவையில் உள்ள வரியை ஒரே தவணையில் செலுத்தும்போது, அவ்வப்போது அரசு அறிவிக்கும் "வட்டி தள்ளுபடி" திட்டங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான அபராதப் பணத்தைத் தவிர்க்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அல்லது முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சில குறிப்பிட்ட சதுரடி வரை வரி விலக்கு அல்லது குறைந்தபட்ச வரி போன்ற சலுகைகள் சட்டத்தில் உள்ளன. இந்த ரகசிய பலன்களை தெரிந்துகொண்டு முறையாக வரி செலுத்தினால், ஜப்தி பயமின்றி உங்கள் கனவு இல்லத்தை பாதுகாக்க முடியும்... அதனால, வரி என்பது தண்டனை கிடையாது.. அது உங்கள் சொத்துக்கான இன்சூரன்ஸ் போன்றது என்பதை உணர்வதே புத்திசாலித்தனம் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications