சர்க்கரை நோய் இல்லாத சமூகம்.. உருவாக்குவது எப்படி?.. இதோ வழிகள்! டாக்டர் பரூக் சொல்லும் டிப்ஸ்!
சென்னை: நீரிழிவு நோய் இல்லாத சமூகத்தை ஏற்படுத்த நாம் முதலில் அந்த நோய் இருப்பதை நம்ப வேண்டும் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீரிழிவு இல்லாத சமூகத்தை ஏற்படுத்த நாம் முதலில் நீரிழிவு என்றொரு நோய் இருப்பதையும் அது கடந்த இருபது ஆண்டுகளில் நம்மிடையே அதிகரித்து வருவதையும் நம்ப வேண்டும்.
சமூகமாக நாம் சில மாற்றங்களைச் செய்து நீரிழிவு குறித்த விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். நம் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு நீரிழிவு நோயாளியாவது இப்போது இருப்பார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சமூகமாக நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பது குறித்த எனது முன்மொழிவுகள் பின்வருமாறு :

உறவினர்கள் வீடுகள்
- வீடுகளுக்கு உறவினர்கள் வருகையில் முதலில் குளிர்பானங்கள் பகிரப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது இனிப்பு கலந்து செய்யப்படும் பதார்த்தங்களை வாங்கிச் செல்வதை தவிர்த்து, செல்லும் வீட்டில் நீரிழிவு நோயர்கள் இருப்பின் சர்க்கரையை ஏற்றாத வண்ணம் நட்ஸ் வகைகள், கடலை, இனிப்பு சேர்க்காத ரஸ்க், கொய்யா காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை வாங்கிச்செல்லலாம்.

டீ காபி
- நமது வீடுகளில் டீ / காபி போன்றவை பகிரப்பட்டாலும் முதலில் சர்க்கரை அல்லது சீனி கலக்காமல் நீரிழிவு இருப்போருக்கு பகிர வேண்டும். அனைவரும் சீனி / சர்க்கரையை தவிர்ப்பது நலம்.
- ரயில் நிலையங்களில் ரயில் வண்டிகளில் முன் கூட்டியே சீனியை கலக்கி எடுத்து வரும் டின்களை தான் காண முடிகிறது. நீரிழிவு இருப்போருக்கென சீனி கலக்காமல் டீ/ காபி கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது. ஆம். இந்தியாவில் ஏழரை கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஒரு பயணச் சூழலை நாம் உருவாக்கினால் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது.

இலவச பரிசோதனை
- தங்களின் அலுவலகங்களில் வேலை செய்யும் முப்பது வயதுக்கு யேற்பட்டோருக்கு இலவசமாக வருடம் ஒருமுறையேனும் சில அடிப்படை ரத்த பரிசோதனைகளை நிர்வாக செலவில் செய்யலாம். அதன் மூலம் நீரிழிவை விரைவில் கண்டறிய முடியும்.
- அலுவலர்கள் மெடிக்கல் இன்சுரன்ஸ் எடுக்க அதில் வரும் ப்ரீமியம் தொகையை பாதி நிர்வாகமும் பாதி அந்த தொழிலாளரும் ஏற்கலாம். இனி வரும் காலம் மெடிக்கல் இன்சுரன்ஸ் காலமாகவே இருக்கப் போகிறது.

பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்குகள்
- நீரிழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகளை பள்ளிகளில் , கல்லூரிகளில் அலுவலகங்களில் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் எப்படி உணவு முறையை வாழ்வியலை அமைத்துக் கொள்வது என்பது பற்றிய சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க இயலும். நாம் சமூகமாக ஒன்று சேராமல் நீரிழிவை கட்டுப்படுத்த முடியாது. ஒன்றிணைவோம் ... வெல்வோம்... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications