Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள்.. புகார் அளிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகிறார்கள். இந்நிலையில், பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், மக்கள் வேண்டாம் என்று கூறினாலும், பொருட்களைக் கட்டாயப்படுத்தி வாங்குமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் அதிகரித்துள்ளது. குறைந்தது 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் தான் எண்ணெய்,சர்க்கரை, அரிசி போடுவதாகவும் சிலர் குற்றம்சாட்டினார்கள்.

தமிழகம் முழுவதும் சுமார் 35,167 முதல் 37,328 வரையிலான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பொருட்களைப் பெறும் வகையில் 2,394 புதிய கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இங்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படுகிறது. சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

How to file a complaint against employees who force you to buy items at ration shops

இதில் வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வாங்க வரும் மக்களிடம், கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, கடலை பருப்பு, பாசிப்பருப்பு, உப்பு பாக்கெட்டுகள், டீ தூள், சோப்பு அல்லது மசாலா பொருட்களை வாங்கினால் மட்டுமே மற்ற பொருட்கள் வழங்கப்படும் என்று ஊழியர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களி உள்ள கடைகளில் இத்தகைய கட்டாய விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். நகர்புறங்களில் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பதால், அவர்களிடம் ஓரளவுவே விற்க முடிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் சாதாரணமாக கட்டாயப்படுத்தி விற்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.

கட்டாயப்படுத்துவதாக புகார்

இதுபற்றி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் சிலர் கூறும் போது, "ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிரமப்பட்டு வரும் சூழலில், எங்களுக்குத் தேவையில்லாத பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமே கிடையாது. இது குறித்துக் கேட்டால், 'மேலிடத்திலிருந்து டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் வாங்கினால் தான் எங்களுடைய கணக்கு சரியாக இருக்கும்' என்று ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர்" என்று இல்லத்தரசிகள் குற்றம் சாட்டினார்கள். அரிசியும் தரமற்ற வகையில் இருக்கிறது என்றும் எப்போது ரேஷன் கடை திறந்திருக்கும்,மூடியிருக்கும் என்று தெரியாமல் அல்லாடுவதாகவும் கூறுகிறார்கள்.

கூட்டுறவுத் துறை விளக்கம்

இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, "ரேஷன் கடைகளில் எந்தவொரு பொருளையும் வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே கூடுதல் பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால், அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்கள். பொதுமக்கள் இது போன்ற புகார்களை அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலரிடமோ அல்லது நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஹெல்ப்லைன் மூலமாகவோ தெரிவிக்கலாம் .

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

1. அரசு அங்கீகரித்த பொதுவான உதவி எண்கள்:

1967 (கட்டணமில்லாத் தொலைபேசி எண் - Toll Free)

1800 425 5901 (நுகர்வோர் பாதுகாப்புத் துறை எண்)

2. வாட்ஸ்அப் புகார் எண்:

நீங்கள் கடையில் நடக்கும் முறைகேடுகளை அல்லது ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து இந்த எண்ணிற்கு அனுப்பலாம்: 94454 64748

3. ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப்:

TNPDS Mobile App: உங்கள் போனில் 'TNPDS' செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் 'புகார்கள்' (Complaints) என்ற பகுதியில் உங்கள் குறையைப் பதிவு செய்யலாம்.

இணையதளம்: www.tnpds.gov.in என்ற தளத்திலும் புகார் அளிக்கலாம்.


எந்தெந்த புகார்களுக்கு இந்த எண்களைப் பயன்படுத்தலாம்?

ரேஷன் கடை திறக்கப்படாமல் இருப்பது.

பொருட்கள் இருப்பு இல்லை என்று பொய் சொல்வது.

பொருட்களின் எடை குறைவாக இருப்பது.

தேவையில்லாத பொருட்களை வாங்கச் சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துவது.

பொருட்களின் தரம் மோசமாக இருப்பது.

கவனிக்க வேண்டியது

நீங்கள் ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க 1967 என்ற எண்ணிற்கு அழைக்கும்போது, உங்கள் குடும்ப அட்டை எண் மற்றும் கடை எண்ணைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். புகார் அளித்த சில நாட்களிலேயே வட்ட வழங்கல் அலுவலர் மூலம் குறிப்பிட்ட ரேஷன் கடை ஊழியர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+