கூட்டுப் பட்டாவில் இருந்து பெயரை நீக்குவது எப்படி? என்னென்ன டாக்குமென்டுகள் தேவை?
சென்னை: கூட்டுப் பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி, கூட்டு பட்டாவில் பெயர் நீக்குவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இவற்றிற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெறுவது எப்படி?. கூட்டு பட்டாவில் பெயர் நீக்குவது எப்படி?.

1.கூட்டு பட்டா தனிப்பட்டா, என்றால் என்ன?
2.கூட்டுப்பட்டாவில் பெயர் சேர்க்க, நீக்க என்ன செய்ய வேண்டும் ?
3.தனிப்பட்டா பெற தேவையான ஆவணங்கள்?
4.தனிப்பட்டா பெற என்ன செய்யவேண்டும் தெரியுமா?
இவைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வது அவசியம்..
இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..
நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிழின் பெயர் தான் பட்டா என்பதாகும்.. ஆனால், ஒரு நிலத்தின் வகையை பொறுத்தும், உரிமையாளர் மற்றும் பயன்பாட்டை பொறுத்தும் பட்டா ஆவணம் மாறுபடும்.
தனி பட்டா, கூட்டு பட்டாவில் தனி பட்டா, கூட்டுப்பட்டா என்ற வகைகள் உண்டு..
இதில் கூட்டுப்பட்டா என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டதுதான் கூட்டு பட்டா (joint patta) ஆகும்..
இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக பதிவாகியிருக்காது. மொத்தமாக எல்லோருடைய பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.
அதாவது உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கி ஆவணம்தான் கூட்டு பட்டா ஆனால், தனி பட்டாவில் (Individual Patta) தனிப்ப்டட நபரின் பெயர், சர்வே நெம்பர் உட்பிரிவு எண் போன்றவை தனித்தனியாக எழுதப்பட்டிருக்கும்..
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாதனி பட்டா என்பது, ஒரு கூட்டு அல்லது பொதுப் பட்டாவிலிருந்து தனி நபருக்காக பிரிக்கப்பட்ட நில உரிமை ஆவணம் ஆகும்.. அதாவது, ஒரு நபர் தனக்கு சொந்தமான நில உரிமையை உறுதி செய்ய, மற்றவர்களின் உரிமையிலிருந்து பிரித்துக்கொள்ள வேண்டும்.
அப்படி கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற வேண்டுமானால், குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். முதலில் அந்த சொத்துக்கு உரிய அனைவரும் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.
வாரிசு சொத்து என்றால், வாரிசு சான்று அல்லது பங்கீட்டு ஆவணம் இருக்க வேண்டும்.
ஆவணங்கள் என்னென்ன?
பின்னர் தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் மூலம் "பட்டா பிரிப்பு" விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பழைய பட்டா, சிட்டா, அடங்கல், பங்கீட்டு பத்திரம் அல்லது விடுவிப்பு பத்திரம் போன்ற ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
வருவாய் ஆய்வாளர் (VAO) மற்றும் நில அளவையாளர் நிலத்தை அளந்து, யார் எந்த பகுதியில் உரிமையாளர் என்பதை உறுதி செய்து அறிக்கை அளிப்பார்கள்.
அதன்பின் தாசில்தார் ஒப்புதல் அளித்தால், கூட்டுப்பட்டா ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பட்டா வழங்கப்படும்.
அனைவரும் சம்மதித்தால் செயல்முறை எளிதாக முடியும்; சம்மதம் இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பு தேவைப்படும்.
தனிப்பட்டா ஆவணம்
1.தனி பட்டா பெற விண்ணப்பிக்க, தற்போதுள்ள கூட்டு பட்டா,
2.முந்தைய பட்டா நகல் மற்றும் பரிசளிப்பு ஆவணம்,
3.விற்பனைச் சான்றிதழ்,
4.பகிர்வு உடன்படிக்கை,
5.நில வரைபடம்,
6.சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது,
7.ஆதார் கார்டு,
8.வாக்காளர் அடையாள அட்டை,
9.ரேஷன் கார்டு,
10.நில அளவை
மேற்கோள்வதற்கான கோரிக்கை மனு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். இறுதியில், எந்தவிதமான சிக்கலும் நிலத்தில் இல்லாதபட்சத்தில் 30 முதல் 60 நாளில் தனி பட்டா கிடைத்து விடும்.
ஒருவேளை, கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் தராவிட்டால், கோர்ட் மூலமாக, தனி பட்டா பெறலாம்.
விடுவிப்பு பத்திரம்
ஒருவேளை கூட்டுப்பட்டாவில் பெயர் சேர்க்க வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட விற்பனை / பரிசு / வாரிசு ஆவணங்களை கொண்டு தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வழியாக பட்டா மாற்றம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு வருவாய் துறையின் தாசில்தார் தான் அதிகாரம் உடையவர்." கூட்டு பட்டாவில் ஒருவரின் பெயரை நீக்க வேண்டுமானால், அந்த நபரின் பதிவு செய்யப்பட்ட விடுவிப்பு பத்திரம் (Release Deed) அல்லது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில்,
வருவாய் துறை (வட்டாட்சியர் / தாசில்தார்) அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications