Agaram Foundation: சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்லூரி படிப்பை வழங்கி வரும் அகரம் அறக்கட்டளையில் சேர்ந்து எப்படி கல்வி உதவித் தொகை பெறுவது என்பதை பார்க்கலாம். இந்த அகரம் அறக்கட்டளையில் இணைந்து படிப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அகரம் அறக்கட்டளை என்பது சென்னை திநகரில் இயங்கி வருகிறது. இதை நடிகர் சூர்யா, கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே ஊரக பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்து அவர்கள் வேலைக்கு செல்வதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவது ஆகும்.

இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை படித்து வருகிறார்கள். மருத்துவம், பொறியியல், சட்டம் என எதை படிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு அகரம் அறக்கட்டளை ஆதரவு அளித்து படிக்க வைக்கிறது.
விண்ணப்பங்கள்
இந்த அறக்கட்டளையில் சேர ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதை அகரம் அறக்கட்டளை குழு ஆய்வு செய்து , உண்மையிலேயே அந்த மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்தானா என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன.
விதை ஊக்கத் தொகை
இந்த ஊக்கத்தொகைக்கு பெயர் "விதை" என்பதாகும். தமிழகத்தில் ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளில் மட்டும் படித்த முதல் பட்டதாரி கல்லூரி மாணவர்களை உருவாக்குகிறார்கள். இதற்காக கல்வி கட்டணம், விடுதி, உணவு கட்டணத்தையும் அகரம் அறக்கட்டளையே செலுத்தி விடுகிறது.
ஊக்கத்தொகை எவ்வளவு
கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது. அது போல் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பு என்றால் 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.
விடுதி கட்டணம்
அத்துடன் விடுதி கட்டணமாக மாதத்திற்கு ரூ 3500 வழங்கப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் இருந்தும் குடும்ப சூழலால் கல்லூரி படிப்பில் படிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் மாணவர்களை தடுத்து அவர்களின் பொருளாதார சூழலை உயர்த்துகிறது இந்த "விதை" ஊக்கத் தொகை திட்டம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
- இந்த அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்
- தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவராக இருத்தல் வேண்டும்
- நடப்பு கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருத்தல் வேண்டும்.
- அகரம் அறக்கட்டளை ஊக்கத் தொகையை பெற மேற்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
இந்த ஊக்கத்தொகை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- ஆதார் கார்டு
- நிரந்தர வீட்டு முகவரி சான்று
- வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான அட்டை
- ரேஷன் கார்டு
- 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- குடும்ப பின்னணி குறித்த கடிதம்
- ஜாதி சான்றிதழ்
- வங்கிக் கணக்கு
விண்ணப்பிப்பது எப்படி
- விதை ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதலில் அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க வேண்டும்.
- அதில் "Agaram foundation scholarship 2025 for college students" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும்
- மேற்கண்ட ஆவணங்களின் புகைப்பட காப்பியை அப்லோடு செய்ய வேண்டும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி முறை எப்படி?
- 10ஆம் வகுப்பு மதிப்பெண், 12 ஆம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண்ணை வைத்து தேர்வு செய்யப்படுவர்.
- அது போல் அவருடைய குடும்ப பின்னணியும் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படும்.
- மாணவர் உண்மையில் என்ன படிக்க விரும்புகிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரிடம் நேர்காணல் நடத்தப்படும்.
- மாணவர்களின் நிதி நிலைமையை சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்வர்.
- எனவே விதை திட்டத்தில் சேர ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள்.
எத்தனை மாணவர்கள்
இந்த அகரம் அறக்கட்டளை மூலம் தோராயமாக 6000 மாணவர்கள் ஆரம்பத்தில் படித்தனர். அதன் பிறகு ஆண்டுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அகரம் உதவி செய்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கிறது.
சூர்யா பேச்சு
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ரத்த வங்கியை வைத்திருந்ததை பார்த்துதான் சூர்யாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அகரம் அறக்கட்டளையை தொடங்கினார் என அடிக்கடி சொல்வதுண்டு. சிரஞ்சீவியால் இதுவரை 8 ஆயிரம் முதல் பட்டதாரி மாணவர்களை அகரம் அறக்கட்டளை உருவாக்கியதாக நடிகர் சூர்யா, அந்த அறக்கட்டளையின் 20 ஆண்டு தொடக்க விழாவில் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் வாழும் தெலுங்கு பேசும் சமூகத்திடம் இருந்து 30 சதவீதம் நிதியுதவி நம் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் தமிழ் மாணவர்களின் படிப்புக்காக கிடைக்கிறது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications