ஓடும் ரயிலில் உடல் நலம் பாதிக்கப்பட்டால்..மருத்துவ சிகிச்சை பெறுவது எப்படி? இப்படி செய்யுங்க போதும்
சென்னை: நம் நாட்டில் குறைந்த விலையில் நீண்ட தூர பயணத்தை சொகுசாக மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் சாய்ஸாக ரயில் பயணம் தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான், ரயில் பயணத்தின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர் மூலமாக சிகிச்சை பெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் முதன்மையானதாக ரயில் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பஸ் மற்றும் விமானங்களை ஒப்பிடும்போது ரயில்களின் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாகும்.

இதனால் தான் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் அதிகளவில் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் தினமும் 2.40 கோடி முதல் 2.50 கோடி மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்வதாக டேட்டாக்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இன்னும் பல மாநிலங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடிக்கடி உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நீண்டதூர ரயில் பயணங்களின்போது சளி, காய்ச்சல் உள்பட பல உடல் உபாதைகளை எதிர்கொள்ளலாம்.
இந்நிலையில் தான் ஓடும் ரயிலில் ஏதாவது உடல்நல பிரச்சனைகளை பயணிகள் சந்தித்தால் அவர்கள் எப்படி டாக்டரை அணுகுவது என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. இதுதொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஓடும் ரயிலில் பயணிகள் யாராவது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக டிடிஇ எனும் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கப் வேண்டும். இதையடுத்து அவர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கெள்வார். அதன்பிறகு அடுத்த ஸ்டேஷனில் டாக்டர் பயணிக்கு சிகிச்சை அளிப்பார்.
இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமானது இல்லை. கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். அதற்கான சீட்டும் வழங்கப்படும். இதுதவிர வேறு ஏதாவது மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் வழக்கமாக பொதுமக்களை பாதிக்கும் உடல் வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு அல்லது அலர்ஜி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டால் அதற்கு டிடிஇ-யிடம் மாத்திரை கேட்டு பெறலாம்.
சிங்கிள் டோஸ் மாத்திரை இலவசமாக வழங்கப்படும். இதற்கு பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இதுதவிர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மருத்துவ உதவிகள் உள்ளன. அதன்படி 138 என்ற உதவி எண்ணை பயணிகள் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications