ஒரு ரூபாய் கூட லஞ்சமே கொடுக்காமல் ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி? எளிய விளக்கம்
சென்னை: ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனிலேயே பட்டா வாங்க முடியும். எப்படி ஆன்லைனில் பட்டா வாங்குவது என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.
நீங்கள் வீடு, நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல் உடனே கையோடு பட்டா வாங்குவதும் மிக முக்கியமான விஷயம் ஆகும். பத்திரம் என்பது இவருடைய நிலத்தை இவர் வாங்கி இருக்கிறார் என்பதை குறிக்கும். அதேநேரம் அந்த நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டுவதற்கு வருவாய்துறை வழங்கும் ஆவணமான பட்டா தான் முக்கியம்
பட்டாவில் தான் அந்த நிலத்தின் அல்லது அந்த வீட்டின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பத்திரம் பதிவதை போல பட்டாவும் மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும்.

முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாட்சியர் அலுவகத்திற்கு அலைய வேண்டும். இப்போது அப்படி இல்லை. ஆன்லைனிலேயே பட்டா வாங்க முடியும். தமிழ்நாட்டில் ஆன்லைனிலேயே பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இடம் அல்லது வீடு வாங்குவோர் மிக எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா என்பதை அறிந்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி? : பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்க நீங்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
'பட்டா மாறுதல் விண்ணப்பிக்க' அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு போகும்.
அதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் ஓடிபி வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளும்.
அதன் பின்னர் நீங்கள் வாங்கிய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் வரிசையாக கொடுக்க வேண்டும்.
பின்னர்,தானப்பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும் டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு வரும்.
அதில், குறிப்பிட்டுள்ளது போல அதற்கான பணிகளும் நடைபெறும். அதன் பின்னர், பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: வீடு அல்லது நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பத்திரம் பதிந்த பின், உடனே பட்டாவும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கியது குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அந்த சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள்.
பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். அப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா விஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான விஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும். எனவே பட்டா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications