புதிய வீடு கட்ட பிளான் அப்ரூவலுக்கு நடையாய் நடந்து செருப்பே தேய்ந்து போச்சா! இனி ஆன்லைனில் ஈஸி!
சென்னை: புதிய வீடு கட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் பிளான் அப்ரூவல் எனப்படும் திட்ட அனுமதி வாங்க அலைய தேவையில்லை. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திட்ட அனுமதிக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து டாப் இன்பார்மர் எனும் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இனி சொந்த வீடு கட்டுவதற்கு நீங்கள் கஷ்டப்படவே தேவையில்லை. ரொம்பவே எளிதாக கட்டிவிடலாம். முன்பெல்லாம் புதிய வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வாங்க வேண்டும். அதை பஞ்சாயத்து அலுவலகத்தில்தான் வாங்க முடியும்.

இதற்காக அந்த அலுவலகத்திற்கு நடையாய் நடந்து செருப்பே தேய்ந்துவிடும். ஆனால் இனி பிளான் அப்ரூவலுக்காக பஞ்சாயத்து ஆபிஸுக்கு போக தேவையில்லை. உங்கள் சொந்த கையெழுத்தை போட்டால் போதும். அடுத்த வினாடியே உங்கள் பிளான் அப்ரூவல் ஆகிவிடும்.
பஞ்சாயத்து ஆபிஸ் அங்கு இங்கு என எங்கும் அலையாமல் பிளான் அப்ரூவல் வாங்குவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம். நீங்கள் வீடு கட்ட போகும் இடத்தை 4 புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ளும். நீங்கள் வீடு கட்டும் இடம் உங்கள் பெயரில்தான் இருக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த பிளான் அப்ரூவலை வாங்க நேரம் இல்லை என்றால் பவர் ஆஃப் அட்டானி எழுதி கொடுத்தால் அவர்கள் உங்கள் சார்பாக விண்ணப்பித்து பிளான் அப்ரூவலை வாங்கலாம். ஒரு வேளை ஒரு இடத்தை லீஸுக்கு எடுத்து அந்த இடத்தில் வீடு கட்ட போறீர்கள் என்றால் அந்த இடம் உங்கள் பெயரில் இல்லாவிட்டாலும் அந்த லீஸ் பத்திரத்தை வைத்து பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பிக்கலாம்.
பின்னர் நீங்கள் கட்டும் புதிய வீட்டின் பட்டா தேவைப்படும். அந்த இடத்தின் லே அவுட், எஃப்எம்வி (ஃபேர் மார்கெட் வேல்யூ) ஆகியவை வேண்டும். இந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து உங்கள் கையெழுத்தை சுயச்சான்று (Self attestation) செய்து விடுங்கள். கையெழுத்து போட்டு வைத்திருக்கும் எல்லா ஆவணங்களையும் எடுத்து ஒரு ஃபைலில் வைத்துவிடுங்கள்.

சொந்த கையெழுத்தை போட்டு பிளான் அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் கட்ட போகும் இடம் 2500 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். அந்த இடத்தில் கட்ட போகும் வீடு 3500 சதுர அடிக்கு குறைவாக இருத்தல் வேண்டும். அந்த வீடு தரைதளம் மட்டும் இருக்கும் வீடாக இருக்கலாம். அல்லது தரைதளமும் முதல் தளமும் சேர்ந்தது போல் இருக்கும் வீடாகவும் இருக்கலாம்.
இந்த இரண்டில் அந்த வீடு எப்படியிருந்தாலும் கண்டிப்பாக 3500 சதுர அடியை தாண்ட கூடாது. அந்த வீட்டோட உயரம் 7 மீட்டரை தாண்டவும் கூடாது. 3500 சதுர அடிக்கு குறைவாக நீங்கள் கடை கட்டினாலும் கம்பெனி கட்டினாலும் நிச்சயம் சொந்த கையெழுத்தை போட்டு பிளான் அப்ரூவலை வாங்க முடியாது.

உங்கள் வீட்டை எப்படி கட்ட வேண்டுமோ அதை பிளான் போட்டு தரும் என்ஜினியரிடம் சொன்னால் அவர் பேப்பரில் வரைந்து கொடுப்பார். அந்த பிளான், மேலே சொன்ன டாக்குமென்ட்களை எடுத்துக் கொண்டு இ சேவை மையத்திற்கு போக வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டுக்கான பிளான் அப்ரூவலை ஆன்லைனில் அப்ளை செய்து அடுத்த நொடியே உங்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
ஆன்லைனில் அப்ளை செய்வதால் கட்டணம் அதிகமாக இருக்கும் என நீங்கள் கருதலாம். இதற்கு முன்பு பஞ்சாயத்து ஆபிஸில் பிளான் அப்ரூவலுக்காக நாம் எவ்வளவு பணம் செலுத்தினோமோ அதை விட குறைவாகத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டும். ஆன்லைனில் பிளான் அப்ரூவல் வாங்குவோருக்கு ஆய்வுக் கட்டணம் என்பது மட்டும் கிடையாது.

சிலர் நினைக்கக் கூடும், ஆய்வுக் கட்டணம் வாங்காததால் நம் வீட்டை ஆய்வு செய்ய யாரும் வரமாட்டார்கள் என! அதனால் பிளான் அப்ரூவலில் ஒன்றையும், நிஜத்தில் கட்டும் போது நம் இஷ்டத்திற்கு கட்டலாம்னு நீங்கள் நினைத்தால் அது தவறு. அப்போது பஞ்சாயத்து ஆபிஸில் உள்ள அதிகாரி கையெழுத்திட்டிருந்தார். ஆனால் தற்போது உங்கள் சொந்த கையெழுத்தை போடுவதால் ஏதாவது தவறு நடந்தால் வேறு யாரையும் கை காட்ட முடியாது.
எனவே பிளான் அப்ரூவலில் என்ன இருக்கிறதோ அதே மாதிரி வீட்டை கட்டுங்கள். பிளானில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை பெரியதாக காட்டிவிட்டு கட்டும் போது சிறியதாக கட்டுவார்கள். அப்படியெல்லாம் செய்யாமல் மழை நீர் சேமிப்பு கட்டியை பெரியதாக கட்டுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications