சென்னை மெட்ரோவில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறுவது எப்படி? அப்டேட்டில் சூப்பர் விஷயம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரா ரயில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செல்போண் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்தால் டிக்கெட் கிடைக்கும். இதன் மூலம் ரயில் டிக்கெட் பெற வரிசையில் நிற்கவே தேவையில்லை.

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள கடும் போக்குரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் தான் சிறந்த தீர்வாக உள்ளது.புறநகர் ரயில் வழித்தடங்கள் இல்லாத பயணிகளில் மக்கள் மெட்ரோவில் பயணிப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

How to get tickets in Chennai Metro through WhatsApp? cellphone number announced

வடபழனி, கோயம்பேடு, பகுதியை இணைக்கும் வகையில் வேளச்சேரி, தரமணி, ஓஎம்ஆர், ரேடியல் ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் வந்தால் சென்னையில் பெரிய அளவில் மிக ஆர்வமுடன் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவார்கள். அதற்கு பரங்கி மலை, வேளச்சரி பறக்கும் ரயில் தடம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

தற்போதைய நிலையில் சென்னை மெட்ரோவில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக பார்க்கிங் வசதி, மின்சார ஆட்டோ வசதி, சிற்றுந்து வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியு.ஆர்.குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி டோக்கன் மூலம் பலர் பயணிக்கின்றனர்.

இதையடுத்து புதிதாக தற்போது சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய 'வாட்ஸ்-அப்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் அலுவலக நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதான முறையில், பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் எடுக்கலாம். இதன் மூலம், பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம்.

எப்படி டிக்கெட் பெறுவது?: சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான செல்போன் எண் 83000-86000 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் 'ஹாய்' என்று அனுப்ப வேண்டும். பின்னர், 'சார்ட் பாட்' என்ற தகவல் வரும்.

அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெறும். அதில் நீங்கள் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரெயில் நிலையம், சேரும் ரெயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்து, 'வாட்ஸ்-அப்', மூலமோ அல்லது 'ஜி-பே' மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும். பயண டிக்கெட் 'வாட்ஸ்-அப்' எண்ணிற்கு வந்துவிடும்.

இந்த டிக்கெட்டை ரெயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்தால் வெளியே சென்றுவிடலாம்.

கடந்த மே மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் அதாவது 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பயணிகள் பயணித்து உள்ளனர். மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை இரண்டாம் கட்ட வழித்தடங்கள் முடிந்த பின்னர், பறக்கும் ரயில் வந்த பின்னர், பெரிய அளவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏனெனில் சென்னையில் ஓஎம்ஆர் மற்றும் ரேடியல் ரோடு பகுதியில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஐடி பணியாளர்கள் பெரும்பாலானோர் மெட்ரோ பயன்படுத்த தொடங்கினால், இப்போது உள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+