Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூர்வீகச் சொத்துக்கு எத்தனை தலைமுறையினர் உரிமை கோரலாம்? பெண்களுக்கு பங்கு இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூர்வீகச் சொத்துகளை எப்படி அறிந்து கொள்வது, இநத் சொத்துக்கள் எத்தனை தலைமுறைக்கு உரிமை கோரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பூர்வீகச் சொத்து எது, பூர்வீகச் சொத்து எவை என்று எப்படி தெரிந்து கொள்வது?

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியும் அதே வேளையில் சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது.

1956-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னர் இந்து சாஸ்திரச் சட்டமே அமலில் இருந்து வந்தது. இந்தியாவின் பெரும் பகுதியில் இந்து மித்தாக்சரா சட்ட முறையே நடைமுறையில் இருந்து வந்தது வங்காளப் பகுதியில் மட்டும் இந்து தயாபாக சட்ட முறை நடைமுறையில் இருந்து வந்தது.
இந்து சாஸ்திர சட்டத்தின்படி, ஒரு இந்து சம்பாதித்த சொத்து, அவரின் தனிச் சொத்து ஆகும். அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ, எந்த வித பிறப்பு உரிமையும் கிடையாது.

அதேபோல, இந்து பெண்கள், தனக்கு என தனிச் சொத்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம் இந்து பெண்களின் சேமிப்பில் அல்லது திருமணத்தின் போது கிடைத்த பரிசுப் பணத்தில் சொத்து வாங்குவதை சீதனச் சொத்து என்பர்.

பூர்வீகசொத்து என்பதற்கு அடையாளமே, ஒரு இந்துவுக்கு அவரின் தந்தை மூலம், பாட்டன் மூலம், முப்பாட்டன் மூலம், ஆக மூன்று தலைமுறை ஆண் வழியில் அந்த சொத்தானது, இவருக்கு வாரிசு உரிமையில் வந்திருந்தால் மட்டுமே அது பூர்வீகச் சொத்து என்பர்.

ஒரு இந்துவுக்கு அவரின் தாய் வழிப் பாட்டன் மூலம் ஒரு சொத்தானது வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அது பூர்வீகச் சொத்து இல்லை. ஏனென்றால் அது தாய் வழியில் வாரிசுமுறையில் கிடைக்கும் சொத்து எனவே அது பூர்வீகம் இல்லை.

tamil nadu property

பூர்வீகச் சொத்தின் சிறப்பு

இப்படி கிடைக்கப் பெற்ற பூர்வீகச் சொத்துக்கு ஒரு சிறப்பு உண்டு அது அந்த சொத்தை அடைந்த அந்த இந்து ஆண்அவர் மட்டுமே அனுபவிக்க முடியாது. அவரின் மகன், அவரின் பேரன், அவரின் கொள்ளுப் பேரன், என மூன்று தலைமுறைகளில் உள்ள ஆண்கள் அவர்களின் பிறப்பு உரிமையில் அந்த பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாட முடியும் அதற்கு மேல் உள்ள தலை முறையான, அவரின் கொள்ளுப் பேரனின் மகன், அதில் பிறப்பால் உரிமை கொண்டாட முடியாது.

பூர்வீகச் சொத்து எத்தனை தலைமுறைக்கு வரும்?

ஒரு சொத்து பூர்வீகமாகக் கிடைத்துள்ளது என்றால் அந்த சொத்து கிடைத்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற மூன்று தலைமுறை மட்டுமே பிறப்பால் உரிமை கொண்டாட முடியும் அதற்கு மேல் உள்ள தலைமுறை பிறப்பால் அந்தச் சொத்தில் உரிமை கோர முடியாது. அதேபோல, ஒருவருக்கு, அவரின் தந்தை, பாட்டன், முப்பாட்டன் ஆகிய மூன்று தலைமுறை ஆண்களின் சொத்துக்களைத் தான் இதேபோல பூர்வீகச் சொத்தாக கருதிக் கொள்ள முடியும். முப்பாட்டனின் தந்தையின் சொத்து ஒருவருக்கு பூர்வீகச் சொத்தாக பிறப்பால் உரிமை கோர முடியாது.

ஆக, ஒருவருக்கு, தகப்பன் வழியில் மேலே மூன்று தலைமுறையும், மகன் வழியில் கீழே மூன்று தலைமுறையும் ஆக இவருடன் சேர்த்தால், ஏழு தலைமுறைகள் மட்டுமே பூர்வீக சொத்துரிமையை பிறப்பால் பெற முடியும். இந்த ஏழு தலைமுறை ஆண்களை "கோபார்சனர்கள்" Coparceners, பங்காளிகள், கூட்டாளிகள், கூட்டுப் பங்காளிகள் என்று இந்து சாஸ்திரச் சட்டம் சொன்னது.

ஒருவருக்குக் கிடைத்த பூர்வீகச் சொத்தை அவரும், அவரின் எத்தனை மகன்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்கு என எடுத்துக் கொள்வர். இதை அந்த மகனும் அவரின் மகனும் பேரனும் கூட்டாக, பூர்வீகச் சொத்தாக அனுபவித்து வருவர். இப்படி பங்கு பிரித்துக் கொள்வதை per stripes என்பர்.

பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாமல் இருந்து வந்தது. 1937-ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன்படி, இறந்த ஆணின் விதவை மனைவி, அவளின் கணவரின் பங்கை அடைந்து அவளின் ஆயுட்காலம் வரை ஆண்டு அனுபவிக்கும் உரிமை மட்டும் வழங்கப்பட்டது. அந்த விதவை மனைவி அப்படிப் கிடைத்த பூர்வீகச் சொத்தின் தன் பங்கை விற்பனை செய்ய முடியாது. அவள் வாழ்நாள் வரை அனுபவிக்க மட்டும் முடியும் என்ற நிலை இருந்தது. அவள் வாழ் நாளுக்கு பின்னர் அவள் கணவரின் மற்ற பங்காளிகளுக்கு (கோபாசனர்களுக்கு) அந்த பங்கு போய்ச் சேரும்.

1956-ல் இந்து சாஸ்திரச் சட்டத்தை அடியோடு மாற்றி விட்டு புதிதாக இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது அதில் பூர்வீகச் சொத்தில், இறந்த கணவரின் பங்கு அவரின் மனைவி மகள் உட்பட அவரின் வாரிசுகளுக்கு போய் சேரும் என்று மாற்றப்பட்டது இதன்படியும், மகளுக்கு ஒரு சிறு பங்கே கிடைத்தது.

மகளுக்கும் மகனைப் போலவே பூர்வீகச் சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் எனக் கருதி, 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது அதன்படி, மகளுக்கும் மகனைப் போலவே சரி சம பங்கு கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+