ஹுஸ்ஸப்பா.. என்னா வெயிலு!.. குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்களுக்கு "ஜில் ஜில் கூலிங்" டிப்ஸ்
சென்னை: என்னா வெயிலு என்னா வெயிலு... ஏசியை 2 பாயிண்ட் கூட்டி வை.. என சொல்லும் அளவுக்கு அப்படியே நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனிக்காலம் அதிகமாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் நிச்சயம் இந்த கோடையில் வெயில் அதிகரிக்கும் என சொல்லப்பட்டது.
அதே போல் இந்த முறையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் தகிக்க தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் இன்று பெரும்பாலான வீடுகளில் ஏசி வசதி இருந்தாலும் 24 மணி நேரமும் ஏசி போட்டுக் கொண்டிருக்க முடியாது.

இது போல் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பதால் உடல் வலியும், மின்கட்டணமும்தான் அதிகரிக்கும். நம் உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சி கிடைக்காது. நம் உடலுக்கு இயற்கையிலேயே குளிர்ச்சி கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தினந்தோறும் பெரியவர்கள் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். அது போல் சிறியவர்கள் என்றால் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடித்து சிறுநீர் நிறைய கழிக்க வேண்டும்.
வாரத்தில் 3 நாட்களாவது தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருட்களை கொண்டு சீயக்காய் அரைத்து வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தலாம்.
எப்போதும் காட்டன் உடைகளையே அணிய வேண்டும். அதிலும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். கருப்பு, டார்க் நிறங்களில் அணிந்தால் வெப்பம் உள்ளே எடுத்துக் கொள்ளும். இதனால் மேலும் அனல் அடிக்கும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளை இந்த வெயிலில் தவிர்க்க வேண்டும்.
நல்ல கதர் ஆடைகளையும் அணியலாம். உண்ணும் பொருட்களிலும் கவனம் இருக்க வேண்டும். புளி அதிகம் சேர்த்த கிரேவி குழம்பு வகைகள், காரமான உணவு, புளிப்பு உள்ளிட்டவற்றை அதிகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ராகி கூழ், கம்பங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், மோர் குழம்பு, லெமன், தக்காளி சாதங்களை உண்ணலாம்.
காபி, டீக்கு பதிலாக பழ ரசம், நீர் மோர், சர்பத், உள்ளிட்டவைகளை அருந்தலாம். வெயிலில் இருந்து வந்தவுடன் பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை குடித்தால் உடலுக்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் அதிக உஷ்ணத்தை கிளப்பிவிடும். எனவே பானையில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிக்கலாம். அதில் நிறைய சத்துகள் கிடைக்கும். சுடுதண்ணீரை குடிக்கலாம்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்களை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எங்கும் அழைத்து செல்ல வேண்டாம். அவசியத் தேவை, மருத்துவ தேவை என்றால் மட்டுமே வெளியே செல்லலாம். இவர்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெயிலுக்கு இதமாக நுங்கு, முலாம் பழம், கிர்னி பழம், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை தினந்தோறும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மோருடன் கலந்து உண்ணலாம். அது போல் நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சமைக்கலாம். அசைவ உணவுகளை வெயில் நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம்.
முகத்தை கழுவ அலோவேரா செடியிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் இயற்கையான ஜெல்லை பயன்படுத்தலாம். கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளி ஆகியவற்றை கொண்டு ஃபேஸ்பேக் போடலாம். கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்க கண்களில் நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம். கண்களில் வெள்ளரிக்காய் பில்லையை வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications