இப்படி ஒரு வசதியா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம ஆப்ஷன்.. வீட்டில் இருந்தபடியே பல லட்சம் வரும்!
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முக்கியமான வசதி ஒன்று உள்ளது. இந்த வசதி மூலம் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்கள் கணக்கிற்கு நிதி செலுத்த முடியும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
உங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்ட கணக்கிற்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி?
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்ட கணக்கை ஆன்லைனில் திறப்பது சாத்தியமில்லை, ஆனால் கணக்கு செயலில் வந்த பின் ஆன்லைனில் டெபாசிட் செய்யலாம். நீங்கள் உங்கள் SSY கணக்கை தபால் அலுவலகம் மூலம் திறந்திருந்தால், உங்கள் SSY கணக்கிற்கு ஆன்லைன் பரிமாற்றங்களைச் செய்ய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை (IPPB) பயன்படுத்தலாம்.
படி 1: உங்கள் IPPB கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்
IPPB சேமிப்புக் கணக்கைத் திறக்கவும்: உங்களிடம் ஏற்கனவே IPPB கணக்கு ஒன்று இல்லையென்றால், IPPB கணக்கைத் திறக்க உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும். இது தபால் நிலையம் வழியாக வழங்கப்படும்.. ஆன்லைன் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் ஒரு அடிப்படை சேமிப்புக் கணக்கு ஆகும்.
உங்கள் IPPB கணக்கிற்கு பணத்தை மாற்றவும்: இணைய வங்கி, மொபைல் வங்கி அல்லது தபால் நிலையத்தில் பண வைப்பு போன்ற முறைகளைப் பயன்படுத்தி உங்கள் சேமிப்பு, கரண்ட் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் IPPB கணக்கிற்கு நிதியை மாற்றலாம்.
படி 2: இதையடுத்து சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு IPPB செயலி வழியாக பணத்தை அனுப்பலாம் .
IPPB மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்: ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளேயில் "IPPB மொபைல் வங்கி" என்பதைத் தேடி, செயலியை இன்ஸ்டால் செய்யவும்.
அஞ்சல் துறைக்கு செல்லவும்: உங்கள் IPPB செயலியில் உள்நுழைந்து அஞ்சல் துறை (DOP) தயாரிப்புகளுக்கான பிரிவுக்குச் செல்லவும்.
சுகன்யா சம்ரிதி கணக்கைத் தேர்வுசெய்யவும்: DOP தயாரிப்புகளுக்குள் உள்ள இருக்கும் "சுகன்யா சம்ரிதி கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கணக்கு விவரங்களை உள்ளிடவும்: உங்கள் SSY கணக்கு எண் மற்றும் இணைக்கப்பட்ட DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும் (பொதுவாக கணக்கு திறக்கும் போது வழங்கப்படும்).
பணம் செலுத்துங்கள்: விரும்பிய வைப்புத் தொகையை உள்ளிட்டு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்.
உறுதிப்படுத்தல்: உங்கள் SSY கணக்கிற்கு நிதி வெற்றிகரமாக மாற்றப்பட்டதும் IPPB செயலி உங்களுக்குத் தெரிவிக்கும்.
எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் இணைய லாக் இன் டைம் உள்ளது.
லாக் இன் டைம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒரு பெண் குழந்தை 10 வயதை அடையும் முன் கணக்கைத் திறக்க முடியும். பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை கணக்கு தொடங்கலாம். அதற்கு மேல் தொடங்க முடியாது. அந்த வகையில் உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் 10 வயதை நெருங்கி இருந்தால் இப்போதே திட்டத்தில் உங்கள் பெயரை லாக் செய்து இணைய முடியும். பெண் குழந்தைக்கு 10 வயதுக்கு முன் எந்த நேரத்திலும் கணக்கைத் திறக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கு அதிகபட்சம் இரண்டு கணக்குகளைத் திறக்கலாம்.
கவனிக்க வேண்டிய விஷயம்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தில் சில தவறுகள் நடந்தால் வட்டி நிறுத்தப்படும்.
1. இந்த திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சேர்த்துவிட்டீர்கள்.. 21 ஆண்டுகள் தொகை முதிர்ந்துவிட்டது என்றால் அந்த வருடமே பணத்தை எடுக்க வேண்டும். எடுக்காமல் வைத்து இருந்தால்.. 21ம் ஆண்டுக்கு பின் வட்டி வழங்கப்படாது. கூடுதலாக 1 ரூபாய் கூட வட்டி கிடைக்காது. அதுவரை வந்த வட்டி + சேமிப்பு தொகை மட்டுமே இருக்கும்.
2. அதேபோல் இடைப்பட்ட காலத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பெயர் கொண்ட அந்த பெண், சிறுமி வெளிநாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமை பெற்றுவிட்டார் என்றால் அவருக்கு வட்டி அதோடு நிறுத்தப்படும், இந்த குடியுரிமை இதற்கு அவசியம்.
3. அதாவது 21 ஆண்டு வரை வெளிநாட்டில் வேலை பார்க்கலாம். அதுவரை அங்கே குடியுரிமை பெற முடியாது.
4.அதோடு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு வைத்து உள்ள அந்த பெண், சிறுமி இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்பட்டு, பாதுகாவலருக்கு அல்லது பெற்றோருக்கு பாக்கி வழங்கப்படும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications