Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி விடிய விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? எந்த டெம்பரேட்சரில் வைப்பது பெஸ்ட்..இதோ விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கிவிட்டதால், வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால் ஏசி விடிய விடிய ஓடினால் கரண்ட் பில் அதிகமாக ஆகிவிடுகிறதே என பலரும் கவலைப்படுவதுண்டு. எனவே ஏசி விடிய விடிய ஓடினாலும் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டெக்னிக்குகளை செய்தால் போதும்.

கோடைக்காலம் துவங்கி வெயில் கொளுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால்,இந்த ஆண்டு மார்ச் துவக்கத்திலேயே உக்கிரம் காட்ட ஆரம்பித்து விட்டது. வீட்டை விட்டு வெளியே போனால் போதும் வியர்வையில் ஒரு குளியல் போடும் அளவுக்கு சட்டையெல்லாம் தொப்பென்று நனைந்து விடுகிறதே என கவலைப்படும் அளவுக்கு வெயில் வெளுக்கிறது.

AC electricity bill temperature

கரண்ட் பில் கம்மியா வரணுமா?

தமிழகத்தின் பல இடங்களிலும் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயில் காலம் ஆரம்பித்து விட்டால் வீட்டில் 24 மணி நேரமும் ஃபேன் ஓடிக்கொண்டே இருக்கும். ஏசி வைத்து இருப்பவர்களும் வெயில் காலத்தில் அதிகமாக ஏசியை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இதனால், கோடைக்காலங்களில் கரண்ட் பில்லும் எக்கச்சக்கமாக எகிறிவிடும்.

முன்பெல்லாம் ஆடம்பர பொருளாகவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஏசி என்பது தற்போது நடுத்தர மக்கள் கூட அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. வெளியில் போய்விட்டு வந்த உடன் ஜில்லென்று இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் முன் கூட்டியே ஏசியை ஆன் செய்து வைத்து விடுவார்கள். இரவு முழுக்கவும் ஏசியை பலரும் பயன்படுத்துவார்கள்..

முறையாக சர்வீஸ் செய்ய வேண்டும்

இப்படி கோடைக்காலங்களில் ஏசி பயன்படுத்துவதால் மின் கட்டணம் தான் தாறுமாறாக உயரக்கூடும். இது நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். ஆனால் வேறு வழியின்றி வெயிலை சமாளிக்க ஏசியை பயன்படுத்தத்தான் வேண்டியிருக்கும்.. ஏசி விடிய விடிய ஓடினாலும் கரண்ட் பில் குறைவாக வர வேண்டும் என நினைப்பவர் நீங்கள் எனில் இதற்கு சில டெக்னிக்குகள் உள்ளன. அது என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

ஏசியை ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் சர்வீஸ் மேன்கள் மூலமாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக சம்மர் தொடங்கும் முன்பாக சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். ஸ்பிலிட் ஏசி வைத்துள்ளீர்கள் என்றால் இண்டோர் மற்றும் அவுட்டோர் என இரண்டு யூனிட்களையும் சர்வீஸ் செய்வது அவசியம், அழுக்கான ஃபில்டர்க்ள் மற்றும் காயில்களில் சீரான இயக்கம் இல்லாதது ஆகியவை உங்களின் கரண்ட் பில்லை வழக்கத்திற்கு மாறாக எகிற வைக்கும்.

ஏசி யூனிட் பார்ட்ஸில் பழுது இருந்தால்

அது மட்டும் இன்றி ஏசி யூனிட்டில் ஏதேனும் ஒரு பார்ட்ஸ் பழுது இருந்தால் அதை உடனடியாக சரி செய்வதன் மூலம் மின்சார செலவு மிச்சமாகும். அது மட்டும் இன்றி ஏதேனும் திடீர் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும். அடுத்ததாக உங்கள் அறை எளிதில் வெயில் ஊடுருவும் தன்மை இல்லாதவாறு பராமரிப்பது அவசியம். அதாவது சூரிய கதிர்கள் விழும் இடத்திற்கு நேராக ஜன்னல்கள் இருந்தால், சூரிய வெப்பம் எளிதில் ஊடுருவாதபடி திரைசீலைகள் அமைக்கலாம்.

இது வெப்பம் அறைக்குள் எளிதில் ஊடுருவுவதை தடுக்கும். இதனால் அறையானது சீக்கிரமாகவே குளிர்ச்சியாக மாறிவிடும். இதன் மூலம் ஏசியின் மின்சார நுகர்வை குறைக்கலாம். கதவுகளை மூடுவதோடு, ஜன்னல்களில் ஏதேனும் விரிசல்கள் இருக்கிறதா என பார்த்து சரி செய்ய வேண்டும். பகல் நேரத்தில் ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றால் வெளி வெப்பம் அறைக்குள் ஊடுருவாத வகையில் வைத்துக்கொள்வது அவசியம்.

எந்த டெம்பரேட்சரில் வைப்பது நல்லது

ஜன்னல்களில் வெப்பம் ஊடுருவாதபடி தடிமனான ஷீட்கள் உபயோகப்படுத்துவதால், குறைந்த பயன்பாட்டிலே ஏசி அறையை குளிர வைக்கும். ஏசியை எப்போதுமே உகந்த வெப்ப நிலையில் வைத்து இயக்குவது அவசியம். எரிசக்தி திறன் பணியகத்தின்படி (BEE) ஏசியின் உகந்த வெப்ப நிலையாக 24 - 25 டிகிரி செல்சியஸ் சொல்லப்படுகிறது. இந்த வெப்ப நிலைப்படி ஏசி டெம்பரட்சேரை வைப்பது அதிக குளிர்ச்சி இன்றி இதமான சூழலையும் எரிசக்தியையும் மிச்சப்படுத்த உதவும். மிகவும் குறைந்த வெப்ப நிலை வைப்பது அதிகப்படியான கரண்ட் பில்லுக்கு வழிவகுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+