தலைக்கேறிய டென்சன்.. வீட்டுக்கடன் செலுத்த முடியாமல் அவதிப்படுறீங்களா? சுமையை குறைக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: இன்று பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்கள் லோனில் வீடு வாங்கிவிட்டு அதை செலுத்தி முடிப்பதற்குள் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் நிலையில் அதை எப்படி குறைப்பது என்று விளக்கியுள்ளார் பொருளாதார ஆலோசகர் ராஜேஷ்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "வீட்டுக்கடன் சுமையினை எப்படி/எப்போது குறைக்கலாம்?

1.வீட்டுக்கடன் வாங்கும் முன் செய்யவேண்டியது...
- நீங்கள் மிகப்பெரிய பொருளாதார ஒப்பந்தத்திற்குள் செல்கிறீர்கள். இப்பொழுதே சரியானவற்றை தேர்வு செய்வது சிறந்தது.
- பெரும்பாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்கள், EMI தொகையினை குறைவாக வைக்க, நீண்ட கால (20-25 வருடங்கள்) கடன்களை தேர்ந்தெடுப்பார்கள். இதனால், EMI குறையுமென்றாலும், நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி அதிகமாகுமென்பதை மறந்துவிடாதீர்கள். ஆகையால், முடிந்த அளவிற்கு, கடன் செலுத்தும் காலத்தினை குறைவாக வைக்க முயலுங்கள்.
- உங்களால் முடிந்த அளவிற்கு அதிகமாக முன் பணம் செலுத்துங்கள். எடுத்துக்காட்டாக, ₹50 லட்சம் கடன், 8% வட்டியில் எடுத்திருந்தால், உங்களது முன் பணத்தில் ₹5 லட்சம் கூடுதலாக செலுத்தினால், வட்டியில் நீங்கள் ₹6 லட்சம் வரை சேமிக்கலாம்.
- வங்கி அதிகாரிகள் எவ்வளவுதான் கட்டாயப் படுத்தினாலும், அவர்களிடம் இன்சூரன்ஸ் எடுத்து விடாதீர்கள். நீங்கள் வெளியே, அதைவிட குறைவான பிரீமியம் தொகையில் அதே அளவு கவரேஜ் உள்ள பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
- அவ்வாறு செய்தால், உங்களுக்குப் பின்னர், இன்சூரன்ஸ் பணம் முழுக்க உங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது, வங்கிகள் உங்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் முயற்சி. நினைவிருக்கட்டும் - இன்சூரன்ஸ் எடுக்கும்படி யாரும் உங்களை கட்டாயப் படுத்த முடியாது
2. முதல் ஐந்து வருடங்கள்:
- இந்த காலகட்டத்தில், உங்களது EMI ல் பெரும்பகுதி (70% - 89%) வட்டிக்கே செல்லும்.
- இந்த காலகட்டங்களில், உங்களுக்கு கிடைக்கும் போனஸ், கமிஷன், ஊக்கத்தொகை போன்றவைகளை, முதல் தொகையை திருப்பி செலுத்துவதற்காக பயன்படுத்தினால், உங்களது வருங்கால வட்டித் தொகை வெகுவாக குறையும்.
- உங்கள் வருமானம் ஏற ஏற, உங்களது EMI தொகையையும் அதிகரியுங்கள். உதாரணமாக, நீங்கள் ₹40 லட்சம் கடன், 20 வருடங்களுக்கு, 7.5% வட்டியில் எடுத்திருந்தால், EMI தொகையில், ₹5,000 கூடுதலாக செலுத்தும்போது, 7 வருடங்களுக்கு முன்னதாகவே உங்களது கடன் முடிந்துவிடும். வட்டித் தொகையில் ₹8 லட்சம் சேமிக்கவும் முடியும்.
- வேறொரு வங்கியில் வீட்டுக்கடன் வட்டி குறைவாக இருந்தால் அந்த வங்கிக்கு உங்களது வீட்டுக்கடனை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும்போது, செயலாக்க கட்டணங்கள் முதலானவற்றை கவனித்து வாங்கவும். ஒப்பந்தத்தை முழுமையாக வாசியுங்கள். தேவையென்றால், ஒரு வழக்குரைஞரின் உதவியை நாடுங்கள்.
3. ஆறு முதல் பத்து வருடங்கள்:
- இந்த காலகட்டத்தில், உங்களது EMI தொகையில் சுமார் 70% அசலாக இருக்கும்.
- இந்த காலகட்டத்தில், பெரும்பாலான வட்டித் தொகையினை, வங்கிகள் உங்களிடமிருந்து வசூலித்திருக்கும். ஆகையால், முன் பணம் செலுத்துவது, தற்போது உங்களுக்கு லாபமில்லாத ஒரு செயல்.
- உங்களிடம் இருக்கும் கூடுதலான பணத்தை நீங்கள் வேறெங்கிலுமாவது முதலீடு செய்யலாம். அப்படி முன் பணம் செலுத்தவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதே தொகையினை வேறெங்கிலும் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் வருமென்பதை கணித்து, அதோடு உங்கள் வீட்டுக்கடன் வட்டி சேமிப்பினை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகு சரியான முடிவை தேர்ந்தெடுக்கவும்.
- இந்த சமயத்தில், வருமான வரி விலக்கினால், உங்களது வட்டித் தொகையில், வெறும் 2.8% மட்டுமே சேமிப்பாக இருக்கும். இதைவிட கூடுதலாக வருமானம் தரும் வழிகளில் உங்களது முதலீடுகளை நீங்கள் செய்யலாம்.
- நீங்கள் ஓரளவிற்கு ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், சந்தை சார்ந்த முதலீடுகளில் (நல்ல நிறுவனங்களின் பங்குகள் / மியூச்சுவல் ஃபண்ட்) உங்கள் பணத்தை போடலாம். தயவு செய்து பங்குச்சந்தை டிரேடிங் போன்ற முறைகளை தவிருங்கள். அது உங்கள் பணத்திற்கும், மனத்திற்கும் நல்லது.
4. பதினோரு வருடங்களுக்கு மேல்:
- தற்போது உங்களது EMI தொகையில் சுமார் 80% க்கும் மேல் அசலாக இருக்கும்.
- இந்த சமயத்தில் முன் பணம் என்பது கூடவே கூடாது. இப்படி செய்தால், வங்கிக்கு தான் லாபம். ஆகவே, செய்யவே செய்யாதீர்கள்.
- பணத்தை விட மேலான ஒரு பயன் (மன அமைதி, சீக்கிரம் கடனை அடைத்தால் நிம்மதி போன்றவை) இருந்தால் மட்டுமே இந்த காலகட்டங்களில் முன் பணம் செலுத்தவும். அவ்வாறு இல்லையென்றால், உங்களது பணத்தினை, நல்ல வருமானம் தரும் முதலீடுகளில் போடவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications