RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பணப் பரிவர்த்தனைகள் முழுக்க மொபைல் ஆப்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட UPI சேவைகளும், நெட் பேங்கிங்கும் நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன.

ஆனால், இந்த வசதியே பெரும் சவாலாகவும் மாறிவிட்டது. ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மக்களின் பணத்தைப் பாதுகாக்க ஒரு அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.

RBI

குறிப்பாக, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் மக்களை அதிகம் பாதித்துள்ளன. CBI, போலீஸ் அல்லது சுங்க அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்கின்றனர். பொய் வழக்கு இருப்பதாக மிரட்டி, பயத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றுகின்றனர். இந்த ஒரு மோசடி மூலம் மட்டும் இந்தியாவில் சுமார் 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பெரும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக ரிசர்வ் வங்கி 'கில் ஸ்விட்ச்' (Kill Switch) மற்றும் 'ஸ்விட்ச் ஆன் / ஸ்விட்ச் ஆஃப்' வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்கும் புரட்சிகரமான பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

கில் ஸ்விட்ச் என்றால் என்ன?

ரயிலில் அவசர சங்கிலியை இழுப்பது போல, உங்கள் வங்கிக் கணக்கில் சந்தேகம் ஏற்பட்ட உடனேயே அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் 'எமர்ஜென்சி பட்டன்' தான் கில் ஸ்விட்ச். உங்கள் மொபைலைத் திருடிவிட்டால் அல்லது தவறுதலாக ஏமாற்றுக்காரருக்கு பணம் அனுப்பிவிட்டால், வங்கியின் மொபைல் ஆப்பில் உள்ள இந்த பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த நொடியே உங்கள் கணக்கு முழுமையாக லாக் செய்யப்பட்டுவிடும். யாரும் ஒரு பைசா கூட எடுக்க முடியாது.

ஸ்விட்ச் ஆன் / ஆஃப் வசதி:

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ஏற்கனவே உள்ள 'கார்டு ஆன்-ஆஃப்' வசதியைப் போலவே, UPI மற்றும் நெட் பேங்கிங் சேவைகளுக்கும் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. இரவு தூங்கும் போது, பயணத்தின்போது அல்லது தேவையில்லாத நேரங்களில் UPI-யை 'ஆஃப்' செய்துவிடலாம். தேவைப்படும் போது மட்டும் 'ஆன்' செய்து பயன்படுத்தலாம். இதனால் மோசடியாளர்கள் உங்கள் கணக்கை அணுகவே முடியாது.

இந்த அம்சங்கள் அமலுக்கு வந்தால், மோசடி நடந்த உடனேயே வங்கி கஸ்டமர் கேரை அழைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளரே உடனடியாக தடுக்க முடியும். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பயத்தை குறைத்து, நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மத்திய அரசு மற்றும் RBI இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்த எப்படி செயல்படுத்துவது என்பதை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. விரைவில் இந்த வசதி அனைத்து வங்கி ஆப்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய திட்டம் ஏழை, நடுத்தர மக்களின் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து 100% பாதுகாக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் இந்தியா இனி பாதுகாப்பான இந்தியாவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+