பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கீங்களா? பிஎஃப் பணத்தை எடுக்க திட்டமா? ஆன்லைனில் பணம் எடுப்பது ஈஸி!
சென்னை: உங்கள் மகளுக்கோ மகனுக்கோ சகோதரிக்கோ சகோதரனுக்கோ திருமணமா? கையை கடிக்கிறதா செலவு? பிஎஃப் பணத்தை எப்படி எடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்.
அதுவும் இந்த பிஎஃப் பணத்தை எடுக்க ஆபிசுக்கு போய் அலைய வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைன் எடுத்து நிம்மதியாக திருமணத்தை நடத்தலாமே!

EPFO தொழிலாளர்கள் வைப்பு நிதி அமைப்பு. ஊழியர் சேமநல நிதி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் வழங்குவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பணம் பங்களிப்பு செய்வதாகும். இந்த பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்றதும் எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியிலிருந்து 12 சதவீதம் வரை தொழிலாளர் சேமநல நிதியாக பிடிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை அந்த நிறுவனமும் வழங்கும். இது தவிர பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12 சதவீதம் தொகையை கூடுதலாக தொழிலாளர் சேம நல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால் இந்த தொகைக்கு நிறுவனம் சார்பில் எந்த பங்களிப்பும் செலுத்தப்படாது.

மாத சம்பளம் ரூ 6500 வாங்கும் நபர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதி பிடித்தம் கட்டாயம் என்பது சட்டமாகும். இந்த நிதியில் இருந்து 50 சதவீதம் பணத்தை திருமணத்திற்காக எடுக்கலாம். இதற்கு PF advance என்ற பெயராகும். ஆனால் அந்த தொழிலாளர் 7 ஆண்டுகளாக தனது சேமநல நிதி பங்களிப்பை கொடுத்திருக்க வேண்டும்.
UAN செயலி மூலமும் தேவையான பணத்தை எடுக்கலாம். உங்களது செல்போன் எண் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். எவ்வளவு பணம் தேவையோ அதை பூர்த்தி செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை பதிவிட்டு பணமெடுக்கும் வகையை தேர்வு செய்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு பூர்த்தி செய்ததும் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை பணம் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். UMang எனும் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிஎஃப் பணத்தை பெற விண்ணப்பிக்க பொது கணக்கு எண் தேவை (Universal Account Number). இந்த எண்ணை ஆக்டிவேட் செய்து அதனுடன் பிஎப் கணக்கு எண், ஆதார் எண், பான் நம்பர் போன்றவை இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பொது கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் பிஎஃப் கணக்கிற்குள் செல்ல வேண்டும். இதையடுத்து ஆன்லைன் சர்வீசஸ் என இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Claim என இருக்கும். அதையும்கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து proceed for online claim என்பதை கிளிக் செய்யவும்.
இதன் பிறகு ஒரு பக்கம் தோன்றும் அதில் எந்த காரணத்திற்காக பணத்தை எடுக்கிறீர்கள் என்பதையும் எவ்வளவு பணத்தேவை என்பதையும் குறிப்பிட வேண்டும். முழு பணத்தை எடுக்க வேண்டுமா அல்லது பாதி பணத்தை எடுக்க வேண்டுமா என்பதையும் குறிப்பிட வேண்டும். பிஎஃப் முழுவதும் எடுக்க form 19, பிஎஃப் 50 சதவீதம் எடுக்க pf advance form 31 என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள முகவரி, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், செக் புக் போன்றவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்தால் ஆதாரில் இணைத்த நம்பருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச்சொல் வரும் அதையும் டைப் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பங்களை அனுப்பியதும் Claim status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் விண்ணப்பத்தை சரியாக அனுப்பியுள்ளோமா என்பது தெரியரும். இந்த விண்ணப்பம் தொழிலாளர் பணிபுரிந்து நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நிறுவனத்திடம் ஒப்புதல் கிடைத்த பிறகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணம் வங்கிக் கணக்கில் 10 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications