கர்ப்பமான அக்கா, அடுத்து தங்கையும்.. மாமனாருடன் சேர்ந்து மருமகன் லூட்டி.. சீரியலை மிஞ்சிய ட்விஸ்ட்
சென்னை: சென்னை கொடுங்கையூரில் அக்காள்-தங்கையை திருமணம் செய்த இளைஞர், மாமனாருடன் சேர்ந்து நடத்திய நாடகத்தால் சிக்கி கொண்டார். மாமானரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய போலீசார் மருமகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 55 வயதாகும் சாமுவேல் என்பவர் ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வருகிறார். இவருக்கு சோனியா என்ற மகளும், சொர்ணா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் 23 வயதாகும் சோனியா, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பம் அடைந்தார். அவரை கவனித்து கொள்ள தங்கை சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சொர்னாவை காதல் வலையில் வீழ்த்திய ஆழ்வான், ஒரு கட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் சொர்ணாவை 2-வது கல்யாணம் செய்திருக்கிறார். அதாவது அக்காவுக்கே தெரியாமல் தங்கையை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி இருக்கிறார்.
இந்த உண்மை சோனியாவுக்கு தெரிந்த பிறகு இருவரையும் சமாதானம் செய்த ஆழ்வான், திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இரண்டு பொண்டாட்டிக்காரராக மாறிய ஆழ்வானுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார். இதனிடையே தினசரி குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அக்காள்-தங்கை இருவரையும் குடித்தவிட்டு டார்ச்சர் செய்வாராம். இதனால் மனம் வெறுத்துப்போன சோனியாவும், சொர்னாவும் கொடுங்கையூரில் உள்ள தங்கள் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டனர்.
கடந்த 12-ந்தேதி ஆழ்வான், தனது 2 மனைவிகளையும் அழைத்துச் செல்ல மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கும், மாமனார் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டதாம். மறுநாள் சமாதானமாக பேசுவதுபோல் மாமனார் சாமுவேலை அழைத்துச்சென்ற ஆழ்வான், மாமனாருக்கு மதுபானம் வாங்கி கொடுத்திருக்கிறார். போதை தலைக்கேறியதும் அவரை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.
பின்னர் தனது மனைவிகளுக்கு போன் செய்து, "உங்கள் தந்தையை கடத்தி விட்டேன். என்னுடன் குடும்பம் நடத்த இருவரும் வராவிட்டால் உங்கள் தந்தையை கொன்றுவிடுவேன்" என மிரட்டினாராம். இதனால் பதறிப்போன அக்காள் தங்கை இருவரும் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த சாமுவேலை மீட்டார்கள். மேலும் ஆழ்வானையும் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
அதில் மதுபோதைக்கு அடிமையான சாமுவேல், மகள்களின் வாழ்க்கையை பற்றி சற்றும் யோசிக்காமல் மருமகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது . அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய போலீசார், மருமகன் ஆழ்வானை கைது செய்தனர். ஆழ்வான் ஏற்கனவே தனக்கு 2 திருமணம் ஆனதை மறைத்து தற்போது அக்காள்-தங்கை இருவரையும் திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆழ்வானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தமிழ் மெகா சீரியல்களே தோற்றும் போகும் என்கிற அளவிற்கு இருப்பது தெரிகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications