Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தை.. தமிழக அரசின் உதவியுடன் மீட்கப்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் இறந்த நிலையில், முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, தமிழக அரசு மற்றும் தனிநபர்களின் உதவியுடன் பாட்டியும், சித்தியும் சுமார் 2 வருடம் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி அழைத்து வந்தார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரவீன்குமார், திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் திருமணம் செய்து அமெரிக்காவில் மிசிசிப்பி மாநிலத்தில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 2022-ம் ஆண்டு மே மாதம் இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் அவர்களுக்கு பிறந்த விஷ்ருத் என்கிற குழந்தை தாய், தந்தை இருவரையும் இழந்து தவித்தது. இதையடுத்து அந்நாட்டு குழந்தை பாதுகாப்பு சேவைகள் அமைப்பு குழந்தையை எடுத்து பராமரித்து வந்ததது.

How was the child who lost his parents in America rescued with the help of Tamil Nadu government

இதனிடையே இறந்துபோன பிரவீன்குமாருடைய வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர், இறந்த இருவரின் பெற்றோரிடமும் பவர் ஆப் அட்டர்னி பெற்று, இருவரின் உடல்களையும் தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்படி பக்கத்து வீட்டு தமிழர், தான் பெற்ற பவர் ஆப் அட்டர்னியை முறைகேடாக பயன்படுத்தி, குழந்தையை அங்கேயே ஒருவருக்கு தத்துக் கொடுத்துவிட்டார்.

இதனிடையே தந்தையையும், தாயையும் இழந்த குழந்தை விஷ்ருத்தை எப்படியாவது மீட்க வேண்டும், குழந்தையின் பாட்டி சாவித்திரி, சித்தி அபிநயா ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்கா சென்று குழந்தையை மீட்க நீதிமன்ற உதவியை நாடினர். அவர்கள் அங்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். காரணம் குழந்தையை தத்து எடுத்தவர்கள் அதனை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படி, தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியத்தலைவர் கடந்த 2023ம் ஆண்டு கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழ்ச் சங்கங்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.. குழந்தை அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தாலும், பெற்றோர் இறந்துவிட்டதால், குழந்தையை பாட்டியும், சித்தியும் கேட்கிறார்கள் என்பதை புரிய வைக்க கார்த்திகேய சிவசேனாபதி முயற்சித்தார்.

மேலும் அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தை விஷ்ருத்தின் பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று மிசிசிப்பி மாநிலத்தின் ஆளுநர் மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்ற உத்தரவின்படி தந்து எடுத்தவர்களுடனும், பாட்டி - சித்தியுடனும் குழந்தை மாறி மாறி கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வந்தது. பாட்டி மற்றும் சித்தியுடன் இருக்கும்போதுதான் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதாக நீதிமன்றதில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தத்து எடுத்தவர்களிடம் குழந்தை பாட்டி மற்றும் சித்தியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று புரிய வைக்கப்பட்டது. இறுதியில் குழந்தையை பாட்டி மற்றும் சித்தியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த இரண்டு ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு அமெரிக்காவில் பிறந்து, அங்கு குடியுரிமை பெற்ற மூன்று வயது குழந்தை விஷ்ருத், பாட்டி மற்றும் சித்தியுடன் நேற்று இரவு சென்னை வந்தான். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். குழந்தை இனி சென்னையில் வளர்க்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+