நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடிய பிரபல கொள்ளையன் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?
சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் நடிகர் விஜயகுமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முனுசாமி என்ற கொள்ளையன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றார். மேலும் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவின் நினைவாக வைத்திருந்த செல்போனையும் திருடி சென்றுள்ளார். இதேபோல் பல வீடுகளில் முனுசாமி திருடியிருக்கிறார். அவர் மீது 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த முனுசாமி 21 வருடங்களுக்கு பிறகு போலீசில் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னையில் பல்வேறு வகையான கொள்ளையர்கள் வலம் வருகிறார்கள். என்னதான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், திருடர்கள் திருடுவது குறையவே இல்லை.. சிசிடிவி கேமராக்களை பொருட்டாக கூட மதிக்காமல் திருடிவிட்டு வெளியூர்களுக்கு தப்பி செல்கிறார்கள். சில திருடர்கள், திருடும் போது, சிசிடிவி அறையில் உள்ள ஹார்ட் டிஸ்குகளையும் திருடி செல்கிறார்கள். க்ளவுடில் சேவ் ஆகி இருந்தால் மட்டுமே கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியும் என்கிற நிலை ஏற்படுகிறது. இது இன்றைக்கு உள்ள நிலை.. என்னதான் திருடர்கள் திருடி தப்பித்தாலும், எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள்.. அதேநேரம் ஒரு திருடன் 21 வருடங்களாக சிக்கவே இல்லை.. இப்போது தான் சிக்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்த முனுசாமி என்பவர் எப்படிப்பட்ட வீடுகளாக இருந்தாலும பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார். இவர் சென்னையில் தலைமைச் செயலக காலனி, ஆவடி, மதுரவாயல், திருமுல்லைவாயில், ஜெஜெ நகர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 21 வருங்களுக்கு முன்பு கொள்ளையன் முனுசாமி, திருமுல்லைவாயிலில் ஒரு திருட்டில் ஈடுப்பட்டிருந்த போது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த முனுசாமி தலைமறைவானார். மீண்டும் பல்வேறு இடங்களில் திருடினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல திரைப்பட நடிகர் விஜயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முனுசாமி, அங்கிருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார். மேலும் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவின் நினைவாக வைத்து இருந்த செல்போனையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.. இந்த திருட்டு சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே முனுசாமி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில் முனுசாமி மதுராந்தகத்தில் பதுங்கி இருப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications