Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை அதிரவைத்த ஒரு ஜாதி! ஒரு நபர்! இன்று ஒருநாளில் அப்படியே மாறிய கர்நாடக அரசியல்! எப்படி தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வெளியான முடிவுகளில் சாதி பெரிய அளவில் பங்கு வகித்துள்ளது.

கர்நாடகாவில் பொதுவாக மத அரசியலை விட ஜாதி அரசியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. லிங்காயத்துகள், ஒக்காலிக போன்ற ஜாதிகள்தான் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய சக்திகளாக உள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பெரும்பான்மை ஜாதிகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் வல்லமை படைத்தவைகளாக உள்ளன.

இந்த நிலையில்தான் அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகின. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக - லிங்காயத்து மோதல்:ஜாதியே அங்கே தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நிலையில்தான் லிங்காயத்து - பாஜக இடையில் கர்நாடகாவில் பெரிய மோதலே தேர்தல் சமயத்தில் ஏற்பட்டது.

How will the Lingayat community decide the BJPs future in Karnataka and How it will help Congress?

தேர்தலுக்கு முன்பில் இருந்தே பாஜகவில் வரிசையாக லிங்காயத்து தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வந்தனர். அங்கே தேர்தலை தீர்மானிக்கும் லிங்காயத்து பிரிவை ஏற்கனவே பகைத்து பாடம் கற்ற வரலாறு உண்டு.

பாஜக கடந்த சட்டசபை தேர்தலுக்கும் முந்தைய தேர்தலான 2013 தேர்தலில் லிங்காயத்து ஜாதியினரை பகைத்து அங்கே பெரிய பாடம் கற்றது.

2013 தேர்தலில் எடியூரப்பாவை ஒதுக்கி.. எடியூரப்பா தனி கட்சியே தொடங்கி லிங்காயத்து வலிமையை பாஜகவிற்கு காட்டினார். அதனால் அங்கே பாஜக ஆட்சியை இழந்து 2013ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அந்த பாடத்தில் இருந்து திருந்தாத பாஜக இந்த முறை மீண்டும் லிங்காயத்து தலைவர்களை ஒதுக்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் பணிகளோடு அவர் ஓரம்கப்பட்டு உள்ளார்.

எடியூரப்பா அங்கே மிகப்பெரிய அரசியல் தலைவர். லிங்காயத்து ஜாதி கடந்து மிகப்பெரிய மக்கள் ஆதரவு உள்ளவர். 2023 லேயே இவர் இன்றி பாஜக தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும் அவரை ஒதுக்கி வைத்து.. பிற சாதிகளுக்கு.. பிற தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

அதேபோல் லிங்காயத்து பிரிவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.

இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு தேர்தலுக்கு முன்பாக சரியாக சென்றார்.

பாஜகவை மிரட்டும் ஒரு ஜாதி:கர்நாடகாவில் லிங்காயத்துகள் மிகவும் வலிமையான ஜாதி பிரிவினர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர். அங்கே இருக்கும் பெலகாவி, தார்வாட் மற்றும் கடக் மாவட்டங்களில் அவர்கள் அதிகம் உள்ளனர்.

அதேபோல் அவர்கள் பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார் மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

How will the Lingayat community decide the BJPs future in Karnataka and How it will help Congress?

லிங்காயத்துகள் பொதுவாக வாக்குகளிக்கும் விதம்தான் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் அங்கே தேர்தலுக்கு முன் வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவரும், முக்கிய லிங்காயத் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பாலியில் உள்ள லிங்காயத்து வீர சைவ அமைப்பின் தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார்.

இந்த நிலையில்தான் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருந்தனர். லிங்காயத் வாக்குகள் பொதுவாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

அவர்கள் பொதுவாக பாஜகவிற்கு வாக்களித்து வந்த நிலையில்தான் தற்போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இது தேர்தலிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிங்காயத்து தொகுதிகள்- முடிவுகள்:மொத்தமாக 69 லிங்காயத்து அதிகம் உள்ள தொகுதிகள் கர்நாடகாவில் உள்ளன. அதில், 45 பேர் காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றுள்ளனர். 20 பேர் மட்டுமே பாஜகவில் இருந்து வென்றுள்ளனர். 2 பேர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வென்றுள்ளனர்.

How will the Lingayat community decide the BJPs future in Karnataka and How it will help Congress?

இந்த தேர்தலில் காங்கிரஸ் 51 லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தியது, அவர்களில் 38 ( லிங்காயத்து ஜாதி கொண்ட வேட்பாளர்கள் மட்டும்) பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் அர்த்தம்.. கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டும் என்றால்.. 75% ஸ்ட்ரைக் ரேட். சுமார் 30% காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் லிங்காயத்துகள்தான்.

லிங்காயத்துகள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகள் பாஜகவின் கோட்டையாக இருந்தன. இப்போது அவை காங்கிரஸ் பக்கம் சென்று உள்ளன.

அங்கே லிங்காயத்துகள் ஆதரவு இன்றி வெற்றிபெறுவதற்கான சோதனை முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளன. எடியூரப்பாவை ஓரம் காட்டியதும்.. லிங்காயத்துகளை பகைத்துக்கொண்டதும் பாஜகவை காலி செய்துள்ளது. ஏற்கனவே தேர்தலில் பாஜகவிற்கு எதிரான சூழ்நிலை நிலவும் நிலையில், தற்போது அங்கேயே லிங்காயத்து ஆதரவும் போய் இருப்பது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+