அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.. மாணவர் சேர்க்கை.. ரூ.3000 உதவித் தொகை.. அப்ளை பண்ணுங்க
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.2023-24ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பள்ளி (வைணவம்), திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), திருச்சி மாவட்டத்தில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிச்சி பள்ளி (வைணவம்), தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி (வைணவம்), திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்) ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
அதன்படி, உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 14 முதல் 24க்குள் இருக்க வேண்டும், இந்துவாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications