2014 முதல் கணக்குகள் ஆய்வு..சிதம்பரம் நடராஜர் கோயில் ஒருங்கிணைப்பாளராக துணை ஆணையர் ஜோதி நியமனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்து அறநிலையத்துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் ஜோதி, சிதம்பரம் நடராஜர் கோயில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு நாட்கள் நேரடி ஆய்வுக்கு வர உள்ளதாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் பொது தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலின் கணக்கு வழக்குகளை அடுத்த மாதம் ஆய்வு செய்ய உள்ளதாக பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்நிலையில் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் ஜோதி, சிதம்பரம் நடராஜர் கோயில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோவிலில் நேரடி ஆய்வு
அதில், "சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில் கணக்கு வரவு செலவு
சபாநாயகர் கோயில், குழு உறுப்பினர்களால் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயில் சொத்துக்கள்
கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு, மரப் பதிவேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயில் நகைகள்
கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். குழுவின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications