Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்கு அதிகாரம் இருக்கு.. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்! சிதம்பரம் தீட்சிதர்கள் அறநிலையத்துறை பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆய்வுக்குத் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கச் சிறப்புக் குழு ஒன்றை அரசு அமைத்து இருந்தது.

அதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் விசாரணைக் குழு நேரடியாக ஆய்வு செய்யவுள்ளது என்று இந்து அறநிலையத் துறை சார்பில் கூறப்பட்டது,

 இந்து அறநிலையத் துறை

இந்து அறநிலையத் துறை

இருப்பினும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள தீட்சிதர்கள், இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பாக அறநிலையத் துறைக்குக் கடிதத்தையும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், இதற்கு இந்து அறநிலையத்துறை இப்போது பதில் அளித்துள்ளது.

 ஆய்வுக்கு எதிர்ப்பு

ஆய்வுக்கு எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அனுப்பிய கடிதத்திற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கமிஷனர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத் துறை குழுவினர் வருகின்ற 7 ,8 தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாகக் கடந்த மாதம் 26ஆம் தேதி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர், இதற்குச் சிதம்பரம் நடராஜர் கோயில் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிர்வகிக்கப்பட்டு வருவதாகக் கூறி ஆட்சேபனை தெரிவித்த அறநிலையத் துறைக்குத் தீட்சிதர்கள் சார்பில் நோட்டீஸ் வழங்கினர்.

 அதிகாரம் உண்டு

அதிகாரம் உண்டு

அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அறநிலையத்துறை ஆட்சி துறைக்கு ஆட்சேபனை கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆட்சித் துறை கமிஷனர் கண்ணன் நோடீட்ஸ் அனுப்பி உள்ளார். அதில் "நடராஜர் கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்கக் கோவிலின் அலுவல்களை விசாரிக்கக் குழுவை நியமிக்க ஆணையருக்கு அதிகாரமுண்டு. சிதம்பரம் நடராஜர் கோவில் கொரோனா தொற்றுக்கு முன் கனகசபை மீது ஏற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 கனகசபை விவகாரம்

கனகசபை விவகாரம்

கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு தளர்த்தி கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காகத் திறக்க அனுமதி அளித்தது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

 ஒத்துழைக்க வேண்டும்

ஒத்துழைக்க வேண்டும்

பல்வேறு தீர்ப்புகளில் நடராஜர் கோயில் பொது கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவில் விவகாரங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க இந்து அறநிலையத்துறைக்குத் தகுதி உண்டு. எனவே கமிஷனர் பிறப்பித்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது இல்லை. வரும் 7, 8 தேதிகளில் இந்து அறநிலை துறை சார்பாக ஆய்வை முடிக்கக் குழுக்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் அனுப்பிய கடிதத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ள சம்பவத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+