கபாலீஸ்வரர் கோயிலில் குத்தாட்டம்.. சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ.. அறநிலையத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் வைத்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இரண்டு பேர் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அறநிலையத்தூறை போலீசில் புகாரளித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் மோகத்தால் கண்ட இடங்களில் தற்போது புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் சில நேரம் வரம்பு மீறி செல்கிறது. பைக்குகளில் ஸ்ட்ண்ட் செய்வது, ரேசில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவிட்டு சில நேரம் போலீசிடம் சில இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

HRCE lodges complaint with cybercrimegainst youth who took videos inside Mylapore temple

அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட இளைஞர்கள் சிலர் ஆர்வக்கோளாரில் இப்படியான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தான் சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு பேர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

புனிதமான இடமாக கருதப்படும் கோவில் வளாகத்திற்குள் இளைஞர்கள் சினிமா பாடலுக்கு டேன்ஸ் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்கவே அனுமதி இல்லாத போது பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கபாலீஸ்வர கோவிலில் நடனமாடுவது போன்ற வீடியோ வெளியிட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடனமாடி வீடியோ பதிவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை போலீஸ் எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+