4 கட்ட தேர்தலில் முதல் 3ல் மோடிக்கு பெரிய அடி.. 4வதில் பாஜகவிற்கு ஷாக்.. அடித்து சொன்ன எக்ஸ்பர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 கட்ட தேர்தலில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் பாஜக கடுமையாக வீழ்ந்து உள்ளது. இதில் மோடிக்கு கடுமையான அடி என்று மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.

Huge blow for BJP in the first 4 phases of the Lok Sabha election 2024 What just happened

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், முதல் மூன்று கட்ட தேர்தல்களில் பாஜக கடுமையாக வீழ்ந்து உள்ளது. எல்லா கட்ட தேர்தல்களிலும் வாக்கு சதவிகிதம் கம்மியாக உள்ளது. அதனால்தான் இப்போது இஸ்லாமியர்களை வாக்களிக்க விடுவது இல்லை. அல்லது இஸ்லாமியர்களை சோதனை செய்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒன்றாக வந்து வாக்களிப்பதாக பாஜகவினர் அச்சத்தில் உள்ளனர். இஸ்லாமியர்களை வெறுக்கும் கும்பல் இது. இஸ்லாமியர்களை இன அழைப்பு செய்யும் கும்பல்.

4 கட்ட தேர்தலில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் பாஜக கடுமையாக வீழ்ந்து உள்ளது. இதில் மோடிக்கு கடுமையான அடி. கடந்த கட்டத்தில் இதன் காரணமாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக மோடி பேசினார். பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக கோஷங்களை கட்டவிழ்த்துவிட்டது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு , ஜெகன் குடுமி மோடி கையில் உள்ளது. சந்திரபாபு நாயுடு ஜெயில் பயம் காரணமாக மோடியிடம் சரண் அடைந்துவிட்டார்.

பாஜக வீழ்ச்சி: அங்கே பாஜகவிற்கு கொஞ்சம் பேஸ் உள்ளது. ஆனால் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோடிக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள். மோடி எங்கள் கட்சியை அழித்துவிடுவார். நீங்கள் வாருங்கள் என்று மோடிக்கு எதிராக ராகுல் காந்தியிடம் சென்றுவிடுவார்கள். கர்நாடகாவில் பாஜக கொஞ்சம் சீட் வாங்கும். சில இடங்கள் கடுமையான போட்டி இருக்கும். ஆனால் 20 இடங்களில் எல்லாம் பாஜக கர்நாடகாவில் வெல்லாது.

ஆந்திர பிரதேசத்தில் கண்டிப்பாக வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் பாஜக இறங்கி உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்து மத்தியில் ஆட்சிக்கு வரலாம் என்று பாஜக நினைக்கிறது. சந்திரபாபு நாயுடு கண்டிப்பாக வெல்ல வாய்ப்பு உள்ள 6 தொகுதிகளை பாஜக பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்கி உள்ளது. கர்நாடகாவிலும் மஜத கட்சியின் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை பாஜக இப்படித்தான் வாங்கியது.

தோல்வி முகம்: அதனால்தான் பிரிஜ்வால் ரேவண்ணாவை பாஜக கைது செய்யவில்லை. பாஜகவிற்கு மகாராஷ்டிராவில் முன்பு போல இடங்கள் கிடைக்காது. பீகாரில் சில இடங்களை இழக்கும். ஜார்கண்டில் பாஜக வேண்டுமென்றால் வரலாம். பாஜகவிற்கு 4ம் கட்ட தேர்தலில் 25 இடங்கள் குறைவாக கிடைக்கும். அதாவது 2019ல் வாங்கியதை விட 25 இடங்கள் குறைவாக இருக்கும். கேரளா, தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடங்களில் கூட வராது.

பல மாநிலங்களில் 1-2 இடங்களை பாஜக இழக்கும். மகாராஷ்டிராவில் பாஜக சில இடங்களை இழக்கும். பாஜகவிற்கு இந்த முறை கூடுதலாக இடம் கிடைக்கும் மாநிலங்கள் என்று சொல்ல முடியாது. பல மாநிலங்களில் 2019ல் பெற்ற இடங்களை விட பாஜக குறைவாக பெறுகிறது. ஆந்திர பிரதேசத்தில் பாஜக கொஞ்சம் இடங்களை சேர்க்கலாம்.

ஆனால் கர்நாடகாவில் பாஜக இடங்களை இழக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக இடங்களை இழக்கிறது. ராஜஸ்தானில் இடங்களை இழக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+