மத்ததை விடுங்க.. ரூ.6000 நிவாரணம் பெறுவதற்கு இதுதான் ரொம்ப முக்கியம்.. ரேஷன் கடைகளில் சுளீர் ஆர்டர்
சென்னை: தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு முக்கியமான விதி ஒன்றை ரேஷன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் பலத்த சேதமும் ஏற்பட்டது.

தென் மாவட்ட வெள்ளம்: இதை தொடர்ந்து சில நாட்களில் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வார தொடக்கத்தில் தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
நிவாரணம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்
அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை: தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண பணம் ரொக்கமாக ரேஷனில் வழங்கப்படுகிறது . இதை நேரடியாக வங்கிகளில் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரேஷன் கடைகளில் பொய்யாக டோக்கன் கொடுத்து பணம் பெறுவது, கள்ள மார்க்கெட்டில் டோக்கன் விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு முக்கியமான விதி ஒன்றை ரேஷன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ரேஷன் கடைகளில் ரூ. 6000 கொடுப்பதற்கு.. கை ரேகை கண்டிப்பாக அவசியம். ரேஷன் கடை ரெக்கார்டில் பதிவாகி உள்ள நபரின் கை ரேகை அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் பொய்யாக டோக்கன் கொடுத்து பணம் பெறுவது, கள்ள மார்க்கெட்டில் டோக்கன் விற்பனை செய்வது போன்ற காரணங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications