தம்பிதுரை மோடிகிட்ட.. ஆஹா, லாஸ்ட்ல ஓபிஎஸ்ஸூக்குதான் பிளஸ்ஸாம்.. எப்படின்னு பாருங்க.. இதுல சசிகலா வேற

கையை பிசைந்து நிற்கும் ஓபிஎஸ் டீம் விரைவில் சசிகலாவை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறதாம் ஓபிஎஸ் டீம்.. தர்மயுத்தம் பார்ட் - 2 என்று அறிவித்துள்ள நிலையில், 2 வேறு முக்கிய அஸ்திரங்களையும் கையில் எடுக்க முனைப்பு காட்டி வருகிறதாம்.. என்ன நடக்கிறது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, அதிமுக தொண்டர்களின் கவனம் சசிகலா பக்கம் திரும்பியது.. காரணம், பிரிந்தவர்களையும், கட்சியையும் ஒன்றிணைப்பேன், அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று ஒரு வருட காலத்துக்கும் மேலாகவே சபதம் போட்டு வருகிறார் சசிகலா..

அதனால், இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி, எடப்பாடி + ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயற்சி மேற்கொள்வார் என்று நம்பப்பட்டது. அதனால்தான், வேட்பாளரை அறிவிக்க போவதாக சசிகலா சொல்லவும், அப்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..

 நோ கமெண்ட்ஸ்

நோ கமெண்ட்ஸ்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சசிகலாவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தார்.. அதேசமயம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க போவதாகவும் செய்தியாளர்களிடமே சொல்லியிருந்தார்.. சசிகலாவும் - ஓபிஎஸ்ஸும் சந்தித்து பேசபோவதாக, கடந்த 2 வருட காலமாகவே தகவல்கள் வட்டமடித்து வந்ததால், இந்த முறை இவர்கள் சந்திப்பு எப்படியும் நடந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டது..

 நிழல் பாஜக

நிழல் பாஜக

அதுமட்டுமல்ல, ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவை தந்தால், வேட்பாளரை சசிகலா அறிவிக்க வாய்ப்பிருக்காது என்றும் தகவல்கள் கசிந்தன. இறுதியில் ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்து, வாபஸும் பெற்றுவிட்டார். அப்போதுகூட சசிகலா செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, "என்னை எல்லாம் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது. இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன். சில பேரை இப்போது எடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.. வரும் எம்பி தேர்தலுக்குள் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது" என்று அதே வார்த்தைகளை மறுபடியும் கூறியிருந்தார்..

 ஆன்மீக டூர்

ஆன்மீக டூர்

அதிமுகவை உங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதற்கு பிறகு, சசிகலா கேரளாவுக்கு ஆன்மீக டூர் கிளம்பி விட்டார்.. எடப்பாடி தரப்பும், பாஜக தரப்பும், ஓபிஎஸ் டீமை பிரச்சாரத்துக்கும் அழைக்கவில்லை.. இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் டீமை, பாஜக நடத்திய விதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது... அதனால்தான், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுகின்றார் என்று பகிரங்கரமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்... பாஜகவை எதிர்த்து கண்டன தீர்மானமும் நிறைவேற்றினர்...

 2 தர்மயுத்தம்

2 தர்மயுத்தம்

நேற்றைய தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும், அவர் பெயரைகூட நான் உச்சரிக்க விரும்பவில்லை என்று கூறி 2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் ஓபிஎஸ் இனி அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்புகளும் எழ ஆரம்பித்துவிட்டன.. அந்தவகையில் 2 வகையான முயற்சிகளை மேற்கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.. தங்கள் நிலைமை குறித்து, டெல்லி தலைமையிடம் எடுத்து சொல்ல சரியான நபர் இப்போதைக்கு யாருமில்லை என்பதுதான் பிரதான பிரச்சனையாக உள்ளதாம்..

வாய்ஸ்

வாய்ஸ்

அதாவது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, ஆதரவாக நின்று, பிரதமர் மோடியிடம் சென்று பேசக்கூடிய அளவுக்கு தம்பிதுரை உதவினாரோ, அதுபோல் தங்கள் தரப்புக்கு யாரும் இல்லை என்பதே அந்த வருத்தமாக உள்ளதாம்.. அண்ணாமலையை மீறி சீனியர்கள் யாரும், ஓபிஎஸ் தரப்புக்கு உதவ முன்வரவில்லை என்கிறார்கள்.. அதனால், டெல்லியில் தமக்காக பேச, நம்பிக்கையானவர் ஒருவர் தேவை என்பதை ஓபிஎஸ் டீம் உணர்ந்தள்ளதாம்.. டெல்லியில் அண்ணாமலையின் "வாய்ஸ்" அதிகமாக இருப்பதால், நம்பிக்கையானவர் கிடைத்தாலும்கூட, அது எந்த அளவுக்கு பலன் தரும் தெரியவில்லை என்கிறார்கள்.

 சசி ப்ளான்

சசி ப்ளான்

இவ்வளவுநாள் பாஜகவின் நிழலாக வலம்வந்த நிலையில், தற்போது தனித்துவிடப்பட்டிருப்பதை ஓபிஎஸ் டீம் உணர்ந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலாவுடன் கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்பதையும் உணர்ந்துள்ளதாம்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே வெற்றி பெறும் என்பதால், எடப்பாடி டீமை இதை வைத்தே விமர்சிக்கலாம் என்று ஓபிஎஸ டீம் யோசிக்கிறதாம்.. இலை கிடைத்தும்கூட, வெற்றி பெற முடியவில்லையே என்பதை தொண்டர்களிடம் கொண்டு சென்று, இரட்டை தலைமை விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்றும் கணக்கு போடுகிறாராம்..

 பிளஸ் பாயிண்ட்ஸ்

பிளஸ் பாயிண்ட்ஸ்

ஒருவேளை அதிமுக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தில் வெற்றியை பெற்றால், அதையும் தங்களுக்கு பிளஸ் ஆக மாற்றி கொள்ளவும் திட்டமிட்டு வருகிறாராம்.. தேர்தலில் தங்கள் தரப்பு போட்டியிடாமல் வாபஸ் பெற்றதால்தான், எடப்பாடிக்கு இந்த வெற்றி பெற்றது என்ற வாதத்தை முன்வைத்து, அதிமுகவுடன் நெருங்கியிருக்க பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் திட்டமிட்டு வருகிறாராம்.. எப்படி பார்த்தாலும், சசிகலா மட்டுமே தன்னை அரவணைக்கக்கூடிய ஒரே நபராக இருப்பதால், அவருடன் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்..

 மீட்டிங் பாயிண்ட்

மீட்டிங் பாயிண்ட்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா பிப்ரவரி 24-ல் மரியாதை செலுத்துகிறார்.. சென்னை புறநகரில் உள்ள மேடவாக்கம் பஜாரில் பிப்ரவரி 24 மாலை 5 மணிக்கு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்... அநேகமாக இந்த நிகழ்வின்போது, ஓபிஎஸ் - சசிகலா தரப்பு சந்திப்புகள் நிகழலாம் என்கிறார்கள்.. அந்தவகையில் சந்திப்பு நடக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+