சல்லி சல்லியாக நொறுங்கும்.. இந்தியா கூட்டணி! அன்று திமுகவுடன் நிதிஷ் குமார் மோத இதுதான் காரணமா? அடடா
சென்னை: இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அக்கட்சி முறிக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வெளியேறுவார். அதோடு பீகாரில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சண்டை: சமீபத்தில்தான் திமுக உடன் நிதிஷ் குமார் மோதினார். பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியில் பேசிய நிதிஷ்குமார்: இந்தியில் நிதிஷ்குமார் பேசிய போது, இந்தி தெரியாத தலைவர்கள் இங்கு இருப்பதால், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று டி.ஆர்.பாலு சொல்லிய நிலையில், இந்தி தேசிய மொழி ; அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபமாக நிதிஷ் சொல்ல, அது சர்ச்சையானது.
என்ன நடந்தது: இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முழுக்க முழுக்க இந்தியில் பேசி இருக்கிறார். இதற்கு மொழிபெயர்ப்பு கேட்டதற்கு நிதிஷ் குமார்.. பொழிபெயர்பை நிறுத்த சொன்னதாகவும்.. ஆங்கில - பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுங்கள். இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கொடுக்க கூடாது என்று வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இந்திய கூட்டணியில் இது பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. கடுமையான மனக்கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இந்திய கூட்டணியில் இனி திமுக என்ன செய்யும்.. திமுகவிற்கான மரியாதை அங்கே கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு கோணம்: இந்த விவகாரம், வேறு ஒரு கோணத்தில் அலசப்படுகிறது. அதாவது, இந்திய கூட்டணியின் ஆலோசனையையும், இதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஸ்டாலின், அப்படியே மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்பட்டதையும் வைத்து இந்தியா கூட்டணி தலைவர்கள் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என நிதிஷ் சொன்னது ஒரு வகையில் இந்தி திணிப்பு போலத்தான். அதனால் நிதிஷ் சொன்னபோது அதை எதிர்த்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்திருந்தால், ஸ்டாலினின் அரசியல் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யாதது விவாதம் ஆனது.
நிதிஷ் குமார் பதவி: இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றதும்.. அவர் கூட்டணியை உடைக்க இப்படி எல்லாம் பேசுகிறார் என்று செய்திகள் வந்தன.
இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் மட்டுமின்றி மமதா பானர்ஜியும் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணி அப்படி பொதுவாக ஒரு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
கூட்டணியை முறிக்கிறார்: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அக்கட்சி முறிக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
முறியும் இந்திய கூட்டணி: இந்த கூட்டணியில் சமீப காலமாகவே மோதல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.
மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் இருக்க மனமின்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த தொடர் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications