பட்டென இப்டி ஒரு முடிவா.. அடிச்சு தூக்கும் திமுக.. "போதும்பா".. கிளைமாக்ஸுக்கு வந்துட்டாரா ஆளுநர் ரவி
ஆளுநர் ஆர் என் ரவி, துணை குடியரசு தலைவராக போட்டியிட போகிறாரா?
சென்னை: திமுக அரசின் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வரும் நிலையில், மற்றொரு சாதகமான முடிவும் தமிழக அரசியல் களத்தில் ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதற்கு காரணம் ஆளுநர் ரவி என்றே கருதப்படுகிறது.
முந்தைய ஆளுநர்கள் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.
ஒருவேளை திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்ததாககூட அப்போது பரவலாக முணுமுணுக்கப்பட்டது.

கலர் மாறும் ரவி?
அதற்கேற்றபடி, பதவியேற்றதில் இருந்தே இவரால் தமிழகத்தில் ஒரே பரபரப்புதான்.. ஒரே சர்ச்சைதான்.. நீட் தேர்வு விலக்கு மசோதா மற்றும் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டு அதிர்ந்து போனது திமுக மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகமும்தான்.. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆரும் சரி, முதல்வரும் சரி, தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர்..

டிஆர் பாலு
ஒருபக்கம் நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இங்கு முதல்வர் கோரிக்கை வைத்து கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற விஷயத்தை டெல்லியில், எம்பி டிஆர் பாலு கையில் எடுத்தார்... ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வரப்பட்ட அடுத்த அதிரடியையும் டிஆர் பாலுவே செயல்படுத்தினார்.

கால வரையறை
இது எல்லாவற்றிற்கும் மேலாக, மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க கால வரையறையை செய்ய வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்ததை பார்த்து பாஜக தரப்பு சற்று மிரண்டுதான் போனது.. அதன் உச்சக்கட்டமாகதான், ஆளுநர் அழைப்பு விடுத்த தேனீர் விருந்தை தமிழகத்தின் பிரதான கட்சிகள் புறக்கணித்தன.. ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் ஆபீஸ் என்ற எதிர்க்கட்சிகளின் காட்டமாக விமர்சனத்தையும் ஆளுநர் ரவி எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம்..

புகைச்சல்
இதற்கு பிறகுதான், மசோதா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்பு என்ற தகவல்கள் கசிந்தன.. திமுகவும் தன்னுடைய எதிர்ப்பு மனோபாவத்தை குறைத்தது.. அதன் வெளிப்பாடாகத்தான், சட்டசபையில் ஆளுநருடனான தங்களின் நட்புறவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வாயாற புகழ்ந்தார்.. மனசு விட்டு பேசினார்.. தேனீர் விருந்துக்கு ஏன் போகவில்லை என்ற விளக்கத்தையும் தந்தார்.. இப்போதைக்கு திமுக மற்றும் ஆளுநர் தரப்பில், புகைச்சல் ஓரளவு குறைந்துள்ளது என்றாலும், ஆளுநர் பொறுப்பு நீண்ட காலத்துக்கு திமுகவிடம் எடுபடாது என்று கவர்னர் மாளிகை தரப்பு முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது..

மெஜாரிட்டி
காரணம், துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்என் ரவி காய் நகர்த்தி வருவதாககூறப்படுகிறது.. குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு 45 சதவீதம் வரை வாக்குகள் உள்ளன... ஆனால், எதிர் தரப்பில், பாஜகவை மிஞ்சி மெஜாரிட்டி ஆதரவு வாக்குகள் உள்ளன.. எனினும், குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே ஆளுங்கட்சி விரும்பும்... குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடுவுக்கு நிறைய சான்ஸ் இருப்பதாக சொல்லப்பட்டாலும், துணை குடியரசு தலைவர் யார் என்ற ஆர்வம்தான் அதிகரித்து வருகிறது..

தூண்டில் போட்ட ரவி
இந்த பதவிக்குதான் ஆர்.என். ரவி, தூண்டில் போட்டுள்ளாராம்.. இதை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார்.. "ஆர்என் ரவி குடியரசுத் துணை தலைவராக விரும்புகிறார்... வட இந்தியாவைச் சேர்ந்த 4 - 5 பேர் துணை குடியரசு தலைவராகப் போட்டிபோடுகிறார்கள்... இதில் ஆர்என் ரவியும் ஒருவர்... அதன் காரணமாகவே ரவி தேசிய அளவில் வலதுசாரிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வகையில் செயல்படுகிறார்...

இடியாப்ப சிக்கல்
ராம ராஜ்ஜியம் என்கிறார்.. தொடர்ந்து தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் நோக்கில் செயல்படுகிறார். மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைவிட ரவி அதிகமாக செயல்படுவதுதான் இங்கே சிக்கல். இது எல்லாமே குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அஜெண்டாதான் காரணம்" என்று போட்டுடைக்கிறார் ஷ்யாம்...

ஷ்யாம் கணிப்பு
எனினும் இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. ஒருவேளை மூத்த அரசியல் நிபுணர் ஷ்யாம் சொல்வதுபோல, ஆளுநர் மாற்றப்பட்டாலோ, அல்லது துணை குடியரசு பதவிக்கான முயற்சியில் ஈடுபட்டு, அந்த பதவியில் அவர் நியமிக்கப்பட்டாலும் கூட, இது திமுகவுக்கான வெற்றியாகவும், தமிழகத்தில் பாஜகவுக்கான மற்றொரு சறுக்கலாகவும் பார்க்கப்படும் என்பதில் மாற்று கருத்தில்லை.. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications