Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சரியில்லயே".. என்னங்க நடக்குது சென்னையில.. கிட்ட கிட்ட இருந்தும்.. "அவங்க" பேசிக்கலயே.. பாத்தீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னைக்கு பிரதமர் மோடி வந்துள்ள நிலையில், முக்கிய நிகழ்வு ஒன்று பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

முந்தைய ஆளுநர்கள் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.
ஒருவேளை திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்ததாககூட அப்போது பரவலாக முணுமுணுக்கப்பட்டது.

Huge expectations and during PM modis visit to chennai, cm stalin did not talk to governor rn ravi

அதற்கேற்றபடி, பதவியேற்றதில் இருந்தே ஆளுநரால் தமிழகத்தில் பரபரப்பும், சர்ச்சைகளும் அவ்வப்போது வெடித்து கொண்டிருக்கின்றன.. நீட் தேர்வு விலக்கு மசோதா மற்றும் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டு அதிர்ந்தே போனது திமுக மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகமும்தான்..

ஆளுநர் ரவி: ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆரும் சரி, முதல்வரும் சரி, தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர். இப்படியான சில நிர்வாக பிரச்சினைகளில், ஆளுநர் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே, அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இதில் பெரிதும் சலசலப்பை கிளப்பியது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் மீது கவர்னர் ரவி முடிவெடுக்காமல் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளதுதான்.

 Huge expectations and during PM modis visit to chennai, cm stalin did not talk to governor rn ravi

சகஜமான பேச்சு: கடந்த ஜனவரி மாதம் கவர்னர் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்திய போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்க்கவும், அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரைதான் சபை குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தை கொண்டு ஸ்டாலின் வந்தார்.. இதை பார்த்த கவர்னர் பாதியிலேயே சட்டசபையில் இருந்து வெளியேறிய சம்பவம் மிகுந்த பரபரப்பை கிளப்பியது.. இந்த பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான், குடியரசு தின தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.. அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்று சகஜமாக பேசிக் கொண்டனர்.

சலசலக்கும் வாதம்: இதன் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா விவகாரம்கிளம்பியது. இதற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரத்தில் கவர்னரை கண்டித்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.. இந்த விவகாரங்கள் மட்டுமே என்றில்லாமல், சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து ஆளுநரன் கருத்துக்கள் மற்றும் தமிழ்நாட்டை, "தமிழகம் " என்று சொல்வதுதான் சரி என்ற ஆளுநரின் வாதங்களும் சலசலப்பை உண்டுபண்ணியபடியே இருக்கின்றன. இதற்கு திமுகவும், அதன் கூட்டணியும் வலிய எதிர்ப்புகளை பதிவு செய்தும் வருகின்றன.

பரஸ்பரம்: இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று பிரதமர் சென்னை வருவதாக அறிவிப்பு வெளியானது.. எப்படியும் பிரதமரை வரவேற்க முதல்வரும், ஆளுநரும் விமான நிலையம் செல்வது மரபு என்பதால், ஸ்டாலினும் ஆளுநர் ரவியும் இன்றைய தினம் ஏர்போர்ட்டுக்கு வரக்கூடும் என்று நம்பப்பட்டது. ஆனால், இருவரும் அருகருகே நின்று பிரதமரை வரவேற்க இருப்பதால் அப்போது பரஸ்பரமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே, விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநரும், அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் வரவேற்றார்கள்.. ஆனால், இருவருமே பேசிக்கொள்ளவில்லை..

இதையடுத்து, சென்ட்ரல் ரெயில் நிலைய திட்ட தொடக்க விழா கூட்டத்திலும் பிரதமர், ஆளுநரும், முதல்வரும் பங்கேற்கிறார்.. அதாவது, பல்லாவரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேடையிலேயே பிரதமருக்கு வலது புறம் முதல்வரும், இடது புறம் கவர்னர் ரவியும் அமர்வதற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.. அதனால், எப்படியும் இந்த மேடையிலும் இருவரும் சுமூகமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இங்கும் இருவருமே பேசிக்கொள்ளவில்லை..

Huge expectations and during PM modis visit to chennai, cm stalin did not talk to governor rn ravi

ஏர்போர்ட் மற்றும் பல்லாவரம் நிகழ்வுகளில், ஆளுநர் ரவியும், முதல்வரும் அருகருகே நின்று கொண்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாததை போல நடந்துகொண்டது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இன்று இரவு, விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சிக்கும் மறுபடியும் 2 பேருமே செல்கின்றனர். அப்போதாவது, சகஜமாக பேசிக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்
போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+