Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலை வெச்சாச்சு.. தென்சென்னையில் பாஜக ஓட்டுக்கு "வேட்டு"? திமுகவுக்கு அந்த "ஆண்டவர்" துணை.. சாத்தியமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் மிகப்பெரிய வியூகங்களை வகுத்து வருகின்றன.. அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதுகுறித்த சில பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதை தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது இந்த தென் சென்னை தொகுதி..

Huge Expectations in Chennai South Constitution and Will Edappadi Palaniswami defeat BJP and DMK strategies

தென்சென்னை: அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. ஐடி கம்பெனிகள், வெளியிடங்களிலிருந்து வந்து தங்குவார்கள் தென் சென்னையில்தான் அதிகம்.. நகர்ப்புறமும், கிராமமும் என எல்லா தரப்பு மக்களையும் ஒன்றிணைத்ததுதான் தென்சென்னை. அதனால், வாக்குகள் எப்போதுமே ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது..

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்த தொகுதியில் எப்போதுமே இருந்து வந்தநிலையில், கடந்த தேர்தலின்போது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தொகுதியில் ஏற்படுத்திவிட்டது.

மக்கள் நீதி மய்யம்: கடந்த 2019ன் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 5,64,872 வாக்குகளை பெற்றிருந்தார்.. அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் 3,02,649 வாக்குகளை பெற்றிருந்தார்.. மக்கள் நீதி மய்யம் ரங்கராஜன் 1,36,645 வாக்குகளை பெற்றிருந்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

தற்போது, எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி முடிவாகவில்லை.. எனினும், திமுகவில், மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஜெயவர்தனே: இந்த தென்சென்னை தொகுதியானது அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. இந்த முறையும் ஜெயவர்தனேவுக்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள்..

ஆனால், திமுகவில் இன்னும் வேட்பாளர் முடிவாகவில்லை.. திமுகவின் பாரம்பரியமான தொகுதி என்றுகூட இந்த தென்சென்னையை சொல்லலாம். திமுகவின் மிக முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வென்ற களமாக தென்சென்னை விளங்கி வருகிறது. எனவே, இந்த முறையும் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

பாஜகவை பொறுத்தவரை, இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது.. காரணம், பிராமண சமூகத்தின் ஓட்டுக்கள் பாஜகவுக்கு கைகொடுத்து வருகிறது..

வலுவான இடம்: கடந்த முறை தேர்தலை எடுத்துக் கொண்டால், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.. அதேபோல, கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடம் வந்த திமுகவுக்கும், 3ம் இடம் வந்த பாஜகவுக்கும், மொத்த வாக்கு வித்தியாசமே வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்கள். அதனால்தான் கடந்த 2019-ல் தமிழிசையே தென்சென்னையில் போட்டியிடும் முடிவில் இருந்தார்..

இந்த முறை தென்சென்னை தொகுதியில் போட்டியிட பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா தென்சென்னையை குறி வைத்து, வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. அதேபோல, மூத்த தலைவர் கரு.நாகராஜன் உட்பட பலரும் இதே தென்சென்னையை குறி வைத்துள்ளனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்: ஆனால், திமுக தரப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தினால், அவரை எதிர்த்து வலுவான பெண் வேட்பாளரை இறக்கவே பாஜக முடிவு செய்துள்ளதாம்.. அந்தவகையில், குஷ்புக்கு தென்சென்னை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.. அல்லது சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு, கன்னியாகுமரியை ஒதுக்க முடியாத பட்சத்தில், தென்சென்னையை ஒதுக்கக்கூடுமாம்.

இதில் ஹைலைட் என்னவென்றால், கடந்த முறை தனித்து போட்டியிட்டு, தென் சென்னையில் 1 லட்சத்து 35 ஆயிரம் ஓட்டுக்கள் ம.நீ.ம வாங்கியுள்ளது. இந்த முறை திமுகவுடன் மய்யம் உள்ளதால், பெருத்த லாபம் திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த முறை போல, அதிமுக கூட்டணியில் தற்போது பாஜகவும் இல்லை.

தனித்தனி கட்சிகள்: இந்த முறை அதிமுக, பாஜக இரண்டு கட்சியுமே தனித்தனியாக போட்டியிட போகின்றன.. திமுக - மநீம ஒன்றிணைந்து களம் காண போகிறது.. தனித்து நின்றே லட்சக்கணக்கில் ஓட்டுக்களை வாங்கிய மநீம, இந்த முறை டபுள் ஜாக்பாட்டை பெறுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளதாம்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட "மினி" கோவை தெற்கு தொகுதி போலவே, தென்சென்னையும் பாஜக, மநீம கட்சிகளுக்கு அமைய போகிறது.. அந்தவகையில், பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை கமல் பிரிப்பதுடன், பிராமண ஓட்டுக்களையும் தன் பக்கம் கூடுதலாக அள்ளுவார் என்றும் நம்பப்படுகிறது..

அபாரம்: இதில், திமுக கூட்டணி, பாஜக என இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும், கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. தனக்கென பிரத்யேகமான வாக்கு வங்கியை அதிமுக பெற்றிருந்தாலும்கூட, இந்த முறை தேர்தலில் திமுகவின் கூட்டணி வலுவாக உள்ளது.. பாஜகவின் தேர்தல் வியூகம் அபாரமாக உள்ளது. எனவே, இந்த கட்சிகளின் வியூகங்களை, அதிமுக முறியடிக்குமா என்று தெரியவில்லை.

மொத்தத்தில், தலைநகரின் தென்சென்னையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிமுக, பாஜக, திமுக கட்சிகள் ஏற்படுத்தியிருக்கின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+