இது 'இந்தியா vs பாகிஸ்தானுக்கும்' மேல.. வாழ்வா? சாவா? போட்டியில் 'தகதக' கரூர்
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக vs திமுக மோதல்களில் முதல் மூன்று இடத்தில் ஒன்று இந்த கூட்டணிக்கு நிச்சயம் உண்டு.
கரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அதிமுகவில் அமைச்சர் விஜயபாஸ்கரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது அனைவரும் அறிந்ததே.
ஆனால், மற்ற வேட்பாளர்களை காட்டிலும், மற்ற தொகுதிகளை காட்டிலும், இங்கு மோதல் உச்சத்தில் உள்ளது.
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக vs திமுக மோதல்களில் முதல் மூன்று இடத்தில் ஒன்று இந்த கூட்டணிக்கு நிச்சயம் உண்டு.
கரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அதிமுகவில் அமைச்சர் விஜயபாஸ்கரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது அனைவரும் அறிந்ததே.
ஆனால், மற்ற வேட்பாளர்களை காட்டிலும், மற்ற தொகுதிகளை காட்டிலும், இங்கு மோதல் உச்சத்தில் உள்ளது.

சம்பாதித்த சொத்துக்கள்
உண்மையை சொல்பவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு இரு வேட்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. செந்தில்பாலாஜி பிரச்சாரத்தை துவங்கும் முன்பு தி.மு.க கரூர் நகரம் மற்றும் ஒன்றியக் கழகங்கள் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஐந்து வருடங்களில் சம்பாதித்த சொத்துகள், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் பற்றிய பட்டியலை, தினம் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன்" என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.

பல கோடி
தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, 'கரூர் நகரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்கியுள்ள எல்.ஜி.பி பெட்ரோல் பேங்க் சொத்தை இரண்டு பத்திரமாக வாங்கியிருக்கிறார். எல்.ஜி.பி பெட்ரோல் பங்கின் பத்திர மதிப்பு மட்டுமே ரூ. 2.98 கோடி. இப்படி பல சொத்துகளை வருமானத்துக்கு மீறி வாங்கிக் குவித்திருக்கிறார்' என்று கூறியுள்ளார்.

ஆதாரம் எங்கே?
மற்றொருபுறம், செந்தில்பாலாஜி 12 தொழில்கள் நடத்தி வருவதாக விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கும் பதில் அளித்துள்ள செந்தில் பாலாஜி, 'நான் ஏதும் அப்படிச் சொத்துகள் வாங்கியிருப்பதாக அவர் நினைத்தால், அதன் ஆதாரத்தை அவர் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு செல்வாக்கு?
கரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 2006 மற்றும் 2011 என இருமுறையும் செந்தில் பாலாஜி வெற்றிப் பெற்றுள்ளார். 2011ல் வென்ற போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. பிறகு, 2016-ல் விஜயபாஸ்கர் கரூரிலும், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியிலும் அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றனர். அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்த போது விஜயபாஸ்கரும் அவரும் இரு துருவங்களாக இருந்தனர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக, விஜயபாஸ்கருக்குக் கிடைத்தது. இதனால், உரசல் இன்னும் அதிகரிக்க, இப்போது இந்த தேர்தல் இருவருக்கும் வெற்றி என்பதைத் தாண்டி, எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்பதையே பிரதானமாக இலக்காக கொண்டு பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் தங்கள் செல்வாக்கை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயமும் உள்ளது.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications