பூனைக்குட்டி வெளியே வந்தது.. திமுக வயிற்றில் நெருப்பை போட்ட ஆளுநர் ரவி.. திரண்ட கட்சிகள்.. என்னாச்சு
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன அனைத்து கட்சிகளும்
சென்னை: ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.. எப்போது இப்படி ஒரு முடிவை இவர்கள் எடுத்தார்கள்? ஒன்று சேர்ந்து எடுத்தார்களா? அல்லது தனிப்பட்ட முடிவா? ஏன் என்னாயிற்று? என்பன போன்ற கேள்விகள் தமிழக அரசியலை உலுக்கி எடுத்துள்ளன..
தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்...
ஆனால், இதனை திமுக புறக்கணித்துவிட்டது.. மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துவிட்டது.

தமிழர் உணர்வுகள்
தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது என்று சொல்லி விசிகவும் புறக்கணித்துவிட்டது.. தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதால், தேநீர் விருந்தினை, புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

திருமாவளவன்
இத்தனை பேருக்கும் என்ன ஆயிற்று? தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு நிகழ்வு இன்று நடந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணங்கள் இல்லாமல் இருக்காது.. முந்தைய ஆளுநர்கள் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார். ஒருவேளை திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்ததாககூட அப்போது விமர்சிக்கப்பட்டது. ஆனால், பதவியேற்றதில் இருந்தே ஒரே பரபரப்புதான்.. ஒரே சர்ச்சைதான்..

பச்சை பெயிண்ட்
ஊட்டி கவர்னர் மாளிகையில் இருந்த பச்சை கலர் பெயிண்ட்டுக்கு பதிலாக, புது பெயிண்ட் அடித்த விவகாரம் முதல், எத்தனையோ அதிருப்தி செயல்பாடுகளில் ஆளுநர் ஈடுபட்டாலும், திமுக அரசு அதை பெரிதுப்படுத்தவில்லை.. அதை பற்றி கேள்வி எழுப்பவுமில்லை.. மற்றொரு பக்கம், அதிமுக தரப்பின் சீனியர்கள் அடிக்கடி ராஜ்பவனுக்குள் செல்வதும், திமுக அரசை பற்றி புகார் கூறுவதுமாக இருந்த நிலையில், அதையொட்டிய நடவடிக்கையையும் ஆளுநர் கையில் எடுத்தபோதுகூட திமுக அரசை அதை பெரிதுப்படுத்தவில்லை.

நீட் தேர்வு
ஆனால், நீட் தேர்வு விலக்கு மசோதா மற்றும் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டு நிஜமாகவே அதிர்ந்தே போனது திமுக அரசு. நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்றத்பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆரும் சரி, முதல்வரும் சரி, தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர்..

ஸ்டாலின் அதிரடி
அதையொட்டிதான் 2 விதமான அணுகுமுறைகளை திமுக அரசு அதிரடியாக கையில் எடுத்தது.. ஒருபக்கம் நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இங்கு முதல்வர் கோரிக்கை வைத்து கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற விஷயத்தை டிஆர் பாலு கையில் எடுத்தார்.

டிஆர் பாலு
"மசோதாக்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.. அந்த அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்... இது ஒரு மோசமான நடவடிக்கை... சட்ட விரோதம்.. ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்" என்று மக்களவையில் டிஆர் பாலு முழங்கியதை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது..

டிஆர் பாலு அதிரடி
ஆளுநருக்கு எதிரான போக்கு, அநேகமாக ஆரம்பித்த புள்ளி இதுவென்றே சொல்லலாம். இதற்கு அடுத்தபடியாக, ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தனி நபர் தீர்மானத்தை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்திருந்தது அடுத்தக்கட்ட எதிர்ப்பு நகர்வாக இருந்தது.. இறுதியாக, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தது உச்சக்கட்ட எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஆளுநர் ரவி
இதற்கு பிறகு, கல்வி விவகாரங்களில் தன் நிலைப்பாட்டை ரவி வெளிப்படுத்தினார்.. அதாவது, தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ரவி திகழ்கிறார்.. இதற்கு முன்பு தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று பேசியதாக செய்திகள் வந்தன.. இதுவே அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தொடர்ச்சியாகக் கூறிவரும் திமுக அரசு, தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது..

டிஆர் பாலு முழக்கம்
அதனால்தான், கல்வி விவகாரங்களிலும், மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது, திமுக தவிர மற்ற கட்சிகளுக்கும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் பெற்று தந்தது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சியே முக்கியம் என்றார்.. இந்த சூழலில்தான் திமுகவின் முரசொலி நாளிதழின் தலையங்கத்தில் பகிரங்கமான எச்சரிக்கையும் எதிர்ப்பும் ஆளுநருக்கு விடப்பட்டது..

முரசொலி
"மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும், ஆனால் அரசியலில் எடுபடாது.. இது நாகாலாந்து அல்ல, தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும்... இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா' என்பதை நினைவுப்படுத்துகிறோம்" என்று பதிவிட்டது.. இந்த தலையங்கம் தான், கவர்னர் மாளிகையை அதிர வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

பூனைக்குட்டி
அப்போதும் ஆளுநர் தரப்பு விடவில்லை.. "இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருகிறது" என்று ஆளுநர் ரவி பேசியது, திமுகவிற்கு அடிவயிற்றில் நெருப்பை அள்ளி போட்டது போல் ஆகிவிட்டது... இது தமிழக கட்சிகளையே அதிர வைத்தது.. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதாகவே கருதப்பட்டது. "ஆளுநரே.. ராமராஜ்ஜியம் உங்கள் ராஜ்பவனிலேயே இருக்கட்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட மொத்த கட்சியும் கொந்தளித்து விட்டது..

திமுக கொந்தளிப்பு
இப்படி ஆளுநர் ரவியே, தனக்கான ஒவ்வொரு எதிர்ப்பையும் எதிர்க்கட்சிகளிடம் சம்பாதித்து கொண்டது போலவே தெரிகிறது.. இதன் தாக்கம்தான், இன்று அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது எனலாம்.. இப்படி ஒரு நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காதது.. ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்தையே இந்த புறக்கணிப்பு முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.. ஒருவேளை, எதிர்ப்புகளின் அடிப்படையில் ஆளுநர் ரவி மாற்றப்பட்டால் அது திமுகவுக்கான வெற்றியாக பார்க்கப்படும்.. பாஜகவுக்கான இன்னொரு சறுக்கலாக பார்க்கப்படும்.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications