தெரிஞ்சுக்குங்க.. மோடிஜி தான் காரணம்.. எதற்காவது கவலைப்பட்டாரா?.. வரிந்து கட்டி வந்த காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம் மோடியை புகழ்ந்து ட்விட் பதிவிட்டுள்ளார்
சென்னை: காயத்ரி ரகுராம், நமது பிரதமர் இந்திய மக்களுக்காக மட்டுமே உழைத்து வந்தார், 130 கோடி மக்கள் ஏதோ ஒரு வகையில் பாஜக அரசால் பயனடைந்தனர், அது மோடி ஜியால்தான் என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் புகழ்ந்து கூறியுள்ளார்.
இந்த முறை 5 மாநில தேர்தலில் பாஜகவால் முன்மொழியப்பட்ட வார்த்தைதான், காங்கிரஸ் முக்தி பாரத். அதாவது காங்கிரசுக்கு எதிரான பிம்பத்தை நாடு முழுவதும் கட்டமைப்புதுதான் இது.
ஒருமுறை பிரதமர் மோடி தந்த பேட்டியில், "காங்கிரஸ் என்பது ஒரு கலாச்சாரம் என்கிறார்கள்.. நான் இந்தியாவை காங்கிரஸ் முக்தி பாரத் ஆக்க வேண்டும் என விரும்புகிறேன்.. அதாவது இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் சுவடே இல்லாத, காங்கிரஸ் இல்லாத ஒரு பாரதத்தை உருவாக்க நினைக்கிறேன்" என்று கூறிருந்தார்.

மெஜாரிட்டி
இந்த 3 வருடங்களாகவே, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில்தான் பாஜக வியூகம் அமைத்து வருகிறது.. அந்த வகையில், 5 மாநில தேர்தலிலும் பாஜகவே பெரும்பாலான வெற்றியை சுவைத்துள்ளது.. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்க உள்ளது.. 403 உறுப்பினர்களை கொண்ட உபியில் பாஜக கூட்டணி 262 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. இதிலேயே பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது.. சமாஜ்வாதி கட்சி 136 இடங்களிலும், பகுஜன் 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது..

சபாஷ்
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 90 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், அகாலிதளம் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை தாண்டி, ஆம் ஆத்மியானது விஸ்வரூபம் அங்கு எடுத்துள்ளது.. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி 9, தேசிய மக்கள் கட்சி 9 இடங்களில் லீடிங்கில் உள்ளது.

வெற்றி பாஜக
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 19, காங்கிரஸ் கூட்டணி 12, திரிணாமூல் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.இதனால், இந்த 3 கட்சிகளுக்குமே பெரிய போட்டி இங்கு ஏற்பட்டுள்ளது.. ஆனால், மெஜாரிட்டி வெற்றியை பாஜக பெற்றுவிட்டநிலையில், அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

காயத்ரி ரகுராம்
இந்நிலையில், தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம் 4 ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே நேரடி பலன் கிடைக்கும். அல்லது எல்லா நன்மைகளையும் தடுக்கும் இடைத்தரகர்கள் (உள்ளூர் கட்சிகள்) இருப்பார்கள். இது கதையின் கருத்து. தமிழ்நாடு 2024 பா.ஜ.க.. அவர்கள் நாட்டிற்கு எதிராகப் போராடுவதற்கு நிறைய பணம் செலவழித்தனர், மக்களைத் தூண்டியது.

அவமதிப்பு
அவர்கள் இந்திய விவகாரங்களில் ஊடுருவ வெளிநாட்டு கலைஞர் மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களை நம் நாட்டைப் பற்றி பேச வைத்தார்கள். எல்லாம் வீணாகிவிட்டது Congress-mukt Bharat உண்மை வெல்லும். அவர்கள் இந்தியாவின் பிரதமரை எல்லா வழிகளிலும் அவமதித்தனர். அவர்கள் பிரதமர் மீது வீசிய எதிர்மறையை பற்றி அவர் கவலைப்படவில்லை.

மோடிஜி
ஆனால் நமது பிரதமர் இந்திய மக்களுக்காக மட்டுமே உழைத்து வந்தார், 130 கோடி மக்கள் ஏதோ ஒரு வகையில் பாஜக அரசால் பயனடைந்தனர், அது மோடி ஜியால்தான்.. உலகம் முழுவதிலுமிருந்து மற்றும் இந்தியாவிலுள்ள பாஜக காரியகர்த்தாக்களுக்கு பெரும் ஆதரவு அளித்ததற்கு நன்றி. சிறந்த களப்பணிக்கு 5 மாநில பாஜக காரியகர்த்தாக்களுக்கு நன்றி. பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாரத தாய் வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications