மனம் ரணமாகிவிட்டது.. உபியில் பாஜகவிற்கு அதிர்ச்சி தந்த ஆர்எஸ்எஸ்.. இது லிஸ்டுலேயே இல்லாத ட்விஸ்ட்
சென்னை: உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஆர்எஸ்எஸ் வேலை செய்யவில்லை: இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் அமைதியின்மை பரவியுள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும், தற்போது உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் சிக்கல்: குஜராத்தை தொடர்ந்து தற்போது உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
1. ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது.
2. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளது.
3. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலருக்கும் - உள்ளூர் உத்தர பிரதேச வேட்பாளர்களுக்கும் செட்டாகவில்லை. இதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. முக்கியமாக ஆர்எஸ்எஸ் பிரிவில் உள்ள ராஜ்புத் ஜாதியினர் உத்தர பிரதேச வேட்பாளர் தேர்வை முடிவு எடுக்கவில்லை. இது பாஜகவிற்கு அதிர்ச்சியாக மாறி உள்ளது.
4. உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ் எஸ் மோடியை விட யோகியை அதிகம் விரும்புகிறது. இப்போது மோடி பிரதமர் ஆனால்.. 4ம் முறை பாஜக 2029ல் மீண்டும் வெல்வது கடினம். 2029ல் யோகியை முன்னிறுத்தினால் பாஜக மீதுள்ள அதிருப்தியால் யோகி தோற்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதுவே இப்போது மோடி தோல்வி அடைந்தால்.. அடுத்த முறை யோகியை புதிய முகமாக களமிறக்கி பாஜக 2029ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும் என்ற திட்டத்தை வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
5. இதன் மூலம் பாஜக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் வாய்ஸ் இருக்கும். இப்போது பாஜக சறுக்கினால் மீண்டும் ஆர்எஸ்எஸ் குரல் பாஜகவில் உயரும். மோடி - அமித் ஷா என்ற இரண்டு பேரின் குரல் மட்டும் பாஜகவில் கேட்காமல் பலதரப்பட்ட குரல்களுக்கு மதிப்பு இருக்கும் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதாம்.
6. அதோடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பாஜக ஆட்சியில் பெரிதாக பலன் அடையவில்லை., பாஜக தலைகள் அடைந்ததை போன்ற பலனை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அடையவில்லை. எங்கள் மனம்
நொறுங்கிவிட்டது என்று ஆர்எஸ்எஸ் உள்ளூப்ர் நிர்வாகிகள் குமுறுகின்றனர். இதனால்தான் உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலைகளை செய்யவில்லையாம்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications