பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியான விவகாரம்.. மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு
சென்னை: திருநெல்வேலி ஷாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியான வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் 4 வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி ஷாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியானார்கள்.
இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்களில் தரம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications