சென்னை பெண் ஸ்ருதிக்கு டெலிவரியில் வந்த மண்டை ஓடு.. ஆடிப்போன குடும்பம்! கடைசியில் எதிர்பாரா ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளம்பெண்ணுக்கு வந்த பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சாம்பல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன இளம்பெண் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், இளைஞர்கள் 3 பேர் தான், இளம்பெண் மற்றும் அவரது தம்பியை மிரட்டுவதற்காக மண்டை ஓடு, எலும்புகளை பார்சலில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளம்பெண் ஸ்ருதி என்பவருக்கு தான் இந்த பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து 3 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Human Skull Bones Sent in Parcel to Young Woman in Che

ஸ்ருதி பெயருக்கு வந்த பார்சல்

சென்னை வியாசர்பாடி ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் ஸ்ருதி (வயது 29). சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் இருக்கும் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை கடையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினமும் அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று இருக்கிறார்.

கடையில் ஸ்ருதி வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது அவரது பெயருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. நான் ஏதும் ஆர்டர் செய்யவில்லையே என ஸ்ருதி கேட்டு இருக்கிறார். அதற்கு பார்சலை கொண்டு வந்த காவலாளி கிருஷ்ணன் லால் இதில் உங்கள் பெயர் முகவரி தான் போட்டிருக்கிறது என்றார்.

மனித மண்டை ஓடு, எலும்புகள்

பார்சலும் பெரிய அட்டைப் பெட்டியில் இருந்ததால் கடை உரிமையாளர் ஜித்தேந்திரன், ஸ்ருதி மற்றும் ஊழியர்கள் அந்த பார்சலை காவலாளி கிருஷ்ணன் லால் பிரித்தார். அப்போது அதற்கு உள்ளே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சாம்பல்கள் இருந்ததால் அனைவரும் திடுக்கிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மண்டை ஓடு, எலும்புகள் இருந்த பார்சலை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ருதியிடமும் யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என விசாரணை செய்யப்பட்டது.

3 பேரிடம் போலீசார் விசாரணை

இந்த நிலையில் ஸ்ருதியின் தம்பிக்கு ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற 37 வயது நபருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அவர் தான் ஸ்ருதி மற்றும் அவரது தம்பியை பயமுறுத்த இவ்வாறு அனுப்பியிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். தினேஷ் குமார் அவரது நண்பர்களான சீனிவாசன் மற்றும் ஜோசப் என்பவர்களோடு சேர்ந்து இந்த பார்சலை அனுப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+