ஹீட்டரை தொட்டு அலறிய சசிகலா.. ஓடிவந்து உதவ முயன்ற கணவர்.. சென்னையில் பெரும் சோகம்
சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் காயவைக்க பலரும் இன்றைக்கு ஹீட்டரைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஈர கையுடன் ஹீட்டரை தொட்டால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அப்படித்தான் சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் ஹீட்டர் போட்ட போது ஏற்பட்ட விபத்தால் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அயப்பாக்கம்
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.

சசிகலாவை தாக்கியது
இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாலியில் போட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சசிகலா ஹீட்டரை நிறுத்த சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

தம்பதி பலி
சசிகலாவின் அபாய குரல் கேட்டு அவரை காப்பாற்ற சென்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சசிகலா, விஜயக்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications