வாட்ஸ்ஆப் பார்த்து மனைவிக்கு பிரசவம்..குரூப்பில் மட்டும் 1024 பேராம்! திடுக்கிட்டு போன குன்றத்தூர்!
சென்னை: சென்னையில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கென்றே தனியாக வாட்ஸ்ஆப் குழு இருந்ததும், அதில் சுமார் 1024 உறுப்பினர்கள் இருப்பதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இயற்கை விவசாயம், இயற்கை உணவு, உள்ளிட்ட இயற்கை சார்ந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.மேலும் சுகப் பிரசவம், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என பல யூட்யூப் சேனல்களிலும் இணைய தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறேன் என சிலர் முயற்சித்து தாய் சேய் உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது. இந்த நிலையில் அதுபோன்ற ஒரு வாட்ஸ் ஆப் குழுவை பார்த்து மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து விபரீதத்தில் சிக்கி இருக்கிறார் கணவர் ஒருவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சென்னை குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பகுதியில் தங்கி உள்ளார். அதே பகுதியில் பொக்லைன் இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவியும், கோபிகா, தாரணி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக சுகன்யா கர்ப்பம் தரித்திருக்கிறார். 10 மாதம் ஆன நிலையில் கடந்த 15ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சுகன்யா கூறி இருக்கிறார். ஆனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறேன் எனக் கூறி மனோகரன் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் தன் வீட்டிலேயே மனைவிக்கு சுகப்பிரசவம் ஆனது குறித்து மனோகரன் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தானே பிரசவம் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதனையடுத்து இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனோகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக அவரது செல்போனை ஆராய்ந்த போது அதில் 'வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்' என தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதில் மனோகரன் இருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி தரும் விதமாக சுமார் 1024 உறுப்பினர்கள் அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்துள்ளனர். மேலும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என ஏராளமான தகவல்களை பகிர்ந்ததும், அந்த தகவல்களை பார்த்து மனோகரன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது. தற்போது மனோகரின் மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே வீட்டில் பிரசவம் பார்த்து உயிர் இழப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில் இது போன்ற விபரீதமான வேலைகளை யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications