ஓயாமல் புறணி.. மனைவியின் வாயிலேயே உலக்கையால் குத்திய கணவர்.. சென்னையில் பயங்கரம்
சென்னை: சென்னை திருவெற்றியூரில் ஓயாமல் குடும்ப பிரச்சனை பற்றி சகோதாரியிடம் புறணி பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார். கொலை செய்த கையோடு போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 51 வயதாகும் துரை வேலைக்கு செல்லாமல் வீட்டில் சுற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி இந்திராணி (48) திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்திராணி அதே தெருவில் வசித்து வரும் சகோதரியான கஸ்தூரி என்பவரது வீட்டுக்கு சென்று, தன் கணவர் வேலைக்கு செல்லாமல் சுற்றுவது குறித்தும், தனது குடும்ப பிரச்சினை குறித்து அடிக்கடி கூறுவாராம். இது துரைக்கு பிடிக்காததால் அவர் தொடர்ந்து மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்திராணி, தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று தலைக்கு 'டை' அடித்துவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது துரைக்கும், இந்திராணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாகி உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த துரை, வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி இந்திராணியின் தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த இந்திராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்குள் இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தார்கள்.
சண்டை பற்றி அறிந்ததும் அதே பகுதியில் வசித்து வரும் இந்திராணியின் சகோதரி கஸ்தூரியும் அங்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த துரை, "இனிமேல் இந்திராணி உங்கள் வீட்டுக்கு வரமாட்டார்" என கூறிவிட்டு நேராக அங்கிருந்து கிளம்பி சென்றார்.இதையடுத்து உள்ளே சென்ற கஸ்தூரி, வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அவரது சகோதரி இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே மனைவியை கொலை செய்த துரை, நேராக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் காதர் மீரா மற்றும் போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications