ஏம்மா, சமைக்கலையான்னுதானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு ஜல்லிக் கரண்டியால அடிக்கிறே.. பரிதாப கணவர்!
குடும்ப தகராறு காரணமாக கணவனை கரண்டியால் அடித்தார் மனைவி
சென்னை: ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் கணவர்.. இதுக்கே கிச்சனில் இருந்த ஜல்லி கரண்டியை எடுத்துவந்து, சரமாரியாக அடித்து நொறுக்கி எடுத்து ஆஸ்பத்திரிக்கே கணவனை அனுப்பி வைத்துவிட்டார் மனைவி!
சென்னை அயனாவரம் பொன்னுவேல் புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு வயது 43. இவரது மனைவி தனலட்சுமி. கார்த்தி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
தனலட்சுமி எப்பவுமே வீட்டில் ஒழுங்காக சமைப்பது கிடையாதாம். அவரது சித்தி அபிராமி பழக்கடை வெச்சிருக்காராம். அதனால் அங்க போயி அடிக்கடி உட்கார்ந்து கொள்வதுதான் வேலையாம்.

தனலட்சுமி
கார்த்தி வேலை முடித்து வீட்டுக்கு சாப்பிட வந்தால், சாப்பாடு பெரும்பாலும் இருப்பது கிடையாது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. எவ்வளவு தகராறு வந்தாலும் அப்போது கூட தனலட்சுமி சமைப்பதே கிடையாதாம்.

தனலட்சுமி
நேற்றிரவு கார்த்தி வீட்டிற்கு சாப்பிட வந்திருக்கிறார். வீட்டில் தனலட்சுமி இல்லை. சித்தி கடைக்கு போய்விட்டிருந்தார். வீட்டில் சமைக்கவும் இல்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்தார் கார்த்த. சிறிது நேரம் கழித்து தனலட்சுமி வீட்டிற்கு வந்தார்.

தகராறு
சித்தியை பார்க்க ஏன் போனே? ஏன் சமைக்கல? என்னத்த சாப்பிடறது? என்று கேட்டுள்ளார். இது தகராறாக உருவெடுத்துள்ளது. உடனே துணைக்கு சித்தியை கூட்டி வந்துவிட்டார் தனலட்சுமி. இரண்டு பேரும் சேர்ந்து கார்த்தியிடம் தகராறு செய்துள்ளனர்.

ஜல்லிக்கரண்டி
ஒரு கட்டத்தில் ஆத்திரமான தனலட்சுமி கிச்சனில் இருந்து கரண்டியை எடுத்து வந்து கார்த்தி தலையில் ஒரே போடாக போட்டார். பிறகு கன்னாபின்னாவென்று கரண்டியாலேயே அடித்தார். இதில், கார்த்திக்கு நெற்றி, இடது புருவம், முன்னங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விசாரணை
உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நெற்றியில் 4 தையல் போடப்பட்டது. பலத்த காயமடைந்ததை அடுத்து மனைவி, அவரது சித்தி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications