வீட்டுக்காரருக்கு சுத்தமாக உணர்ச்சியே இல்லை! அரசு மருத்துவமனை அலட்சியம்? கலெக்டர் ஆபிசில் கதறிய பெண்
சென்னை: முதுகு தண்டுவடத்தில் ஊசி போடும் போதும் அது உடைந்துவிட்டதாகவும், இதனால் என் கணவருக்கு இடுப்பிற்கு கீழே உணர்ச்சியே போய்விட்டது. அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால் தான் என் கணவருக்கு இப்படி ஆகிவிட்டது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபிசில் பெண் ஒருவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது கணவரால் நடக்க முடியவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். புகாரளித்த பிறகு அந்தப் பெண் கண்ணீருடன் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

என் பெயர் சாவித்திரி. என் கணவர் பெயர் கந்தன் குமார். மார்ச் 10 ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் பண்ணிணோம். வயிற்றில் கட்டி இருக்கு என்று சொன்னாங்க. அதற்கு 23ஆம் தேதி அறுவை சிகிச்சை செஞ்சாங்க. உள்ளே அழைத்து சென்ற பின்னர் எந்த பதிலும் வரவில்லை. இரண்டு மூன்று மணி நேரமாக வெளியே வரவே இல்லை. அப்புறம் நானே போய் கேட்டேன்.
அதற்கு ஊசி உடைந்துவிட்டது. ஆபரேஷன் லைட்டா பண்ண வேண்டும் என்று சொன்னாங்க. வயிற்றில் கீறி விட்டுவிட்டோம் என்று சொன்னாங்க. பின்னர் 7 மணிக்கு பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க.. ரிசல்ட் வந்த பிறகு சொல்றோம்னு சொன்னாங்க.. ஆனால் 6 மணி நேரமாக எதுவுமே சொல்லவில்லை. அதுக்கு அப்புறமாக வயிற்றில் ரத்தம் கசிகிறது.. உங்க கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், இனிமேல் நீங்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு தான் போகனும் என்று சொன்னாங்க..
வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடல் நலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன
அவங்க அப்படி சொன்னதும் எங்களுக்கு என்ன பண்றது.. ஏது பண்றது என்றே தெரியவில்லை.. டாக்டர்கள் சொல்லியதால் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கே அவங்க சொல்றாங்க.. காலை எடுத்து வைத்து நடக்க வாய்ப்பு இல்ல.. மனசை தேர்த்திக்கொள்ளுங்கள் என்று சொல்றாங்க.. நானே வளர்ச்சியில்லா குழந்தையை வைத்திருக்கிறேன்.. என்ன பண்றது என்றே தெரியலை. என்னால தாங்க முடியல.
இப்போ என் வீட்டுக்காரருக்கு இடுப்புக்கு கீழே சுத்தமாக உணர்ச்சியே இல்ல.. கடந்த ஒரு மாதமாக பாத்ரூம்.. டாய்லட்.. எல்லாத்துக்கும் நான் தான் உதவி செய்றேன்.. என் வீட்டுக்காரர் எப்படி இருக்கிறாரோ.. அப்படியே அனுப்புறேன் என்று சொல்லிட்டு கடைசியில் மோசம் பண்ணிட்டாங்க.. வயிற்றில் கட்டியோ, அடைப்போ இருப்பதாக சொல்லி கூட்டிட்டு போனாங்க.. முதுகுதண்டில ஊசி போடுகிற போது அந்த ஊசி உடைந்துவிட்டது.
ஆனால் அதை எங்களிடம் சொல்லவே இல்லை. நானோ போய் கேட்ட பிறகு தான் இதையெல்லாம் சொல்றாங்க.. இப்போது என்ன சொல்றாங்க என்றால் உடற்பயிற்சி செய்தால் உணர்ச்சி வந்துவிடும் என்று சொல்கிறாங்க.. ஆனால் இது உண்மையில்லை. அவங்க மறைக்கிறாங்க. அவங்க நரம்பையே கட் பண்ணிட்டாங்க.. உக்கார கூட முடியல.. இவ்வாறு அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.












Click it and Unblock the Notifications