கோமதியை தரையில் படுக்க வைத்து.. வெலவெலக்க வைத்த குடிகார கணவன்.. சென்னையில் ஷாக்!

மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிகார கணவனிடம் சிக்கி கொண்ட ஒரு பெண், தன் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போனதுதான் அவர் செய்த தவறே.. இறுதியில் அநியாயமாக ஒரு உசுர் போய்விட்டது.. 2 ஜீவன் அனாதையாகி நிற்கின்றனர்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஹரி... 40 வயதாகிறது.. இவர் மனைவிதான் கோமதி.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

ஹரி ஒரு எலக்டிரிஷியன்.. எந்த வேலைக்கும் ஒழுங்காக போக மாட்டாராம்.. தினமும் தண்ணி அடிப்பாராம்.. கோமதி மீது சந்தேகப்படுவாராம்.. தினமும் சண்டையும் நடக்குமாம்.

ஹரி

ஹரி


இந்நிலையில், கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை தற்காலிகமாக கிடைத்துள்ளது.. ஏற்கனவே ஹரியை சந்தேகப்பேய் ஆட்டிப்படைக்க, கோமதி வேலைக்கு போகவும் அது இன்னும் ஓவர் ஆகிவிட்டது.. அதுமுதல் விடாமல் சண்டை சச்சரவாகவே வீடு இருந்திருக்கிறது.

 விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

கோமதியை போதையில் கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். ,இதனால் விருகம்பாக்கத்தில் உள்ள தன் அம்மாவுக்கு போன் செய்து கோமதி அழுவாராம்.. அம்மாவும் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்து விட்டு போவாராம். சம்பவத்தன்றும் அப்படித்தான் சமாதானப்படுத்த அம்மா சென்றபோது, பிள்ளைகள் வெளியே விளையாடி கொண்டிருக்க, தம்பதி இருவரும் வீட்டிற்குள் சண்டை போட்டு கொண்டிருந்திருக்கிறார்கள்.

கோபம்

கோபம்


இதை தட்டிக் கேட்டபோது, மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கோபத்தில் ஹரி சத்தம் போட்டுள்ளார்.. இதனால் வெளியே வந்து நின்று கொண்டுள்ளார் கோமதியின் அம்மா.. ஆனால், அவர் விருகம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதாக நினைத்து, ஹரி கோமதியை சரமாரியாக தாக்கி உள்ளார்.. திடீரென அலறல் கேட்கவும் வெளியே நின்று கொண்டிருந்த அம்மா, பதறியடித்துக் கொண்டு உள்ளே போனால், தரையில் கோமதியை படுக்க வைத்து அவரது கழுத்தை கரகரவென ஹரி அறுத்து கொண்டிருந்தாராம்.

 விசாரணை

விசாரணை

அலறி துடித்த தாய், மகளின் உடலை மீட்டு கொண்டு போய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், உயிர் ஏற்கனவே போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இதையடுத்து நீலாங்கரை போலீஸார், கோமதி சடலத்தை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்... அதற்குள் போலீஸ் ஸ்டேஷனில் ஹரி சரணடைந்தார்... இந்தச் சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த குழந்தைகள் 2 பேரும் தாய், தகப்பன் இன்றி அழுது கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+