உன் பிரண்ட் எட்டி பார்க்கிறான்.. அவன் அப்படித்தான்.. கண்டுக்காத கணவர்.. கத்திக் குத்து.. கொலை
மனைவியை கொன்ற கணவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "நான் டிரஸ் மாத்தும்போது, உன் பிரண்ட் எட்டி பார்க்கிறான்" என்று மனைவி கணவனிடம் புகார் சொல்லி உள்ளார். ஆனால் இதை நம்ப மறுத்த கணவன், மனைவி மணிமேகலையை கத்தியை எடுத்து குத்தி கொலை செய்யும் அளவுக்கே போய்விட்டார்!
பெருங்குடி கல்லுக்குட்டை இந்திரா தெருவை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவராக உள்ளார். மனைவி மணிமேகலை. 2 வயதில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். 30 வயதான உதயகுமார், மதுவுக்கு அடிமையானவர்.
தினமும் மது இல்லாமல் இருக்க மாட்டார். மேலும் நண்பர்களையும் வரவழைத்து, வீட்டு வாசலில் தண்ணி அடிப்பதையும் பழக்கமாக வைத்திருந்து இருக்கிறார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

டிரஸ்
2 நாளைக்கு முன்பும், இப்படித்தான் உதயகுமார் 4 நண்பர்களுடன் வீட்டில் தண்ணி அடித்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் சென்று டிரஸ் மாற்றி இருக்கிறார் மணிமேகலை. இதனை உதயகுமார் நண்பர் மாணிக்கவேல் எட்டி பார்த்து உள்ளார்.

சண்டை
துணி மாற்றுவதை எட்டி பார்த்ததும், மணிமேகலை அதிர்ச்சி அடைந்தார். உடனே கணவனிடம், "நான் துணி மாத்தும்போது, உன் நண்பன் எட்டி பார்க்கிறான்" என்று அழுதவாறே சொல்லி உள்ளார். ஆனால் இதை நம்பாத உதயகுமாரோ, மணிமேகலையை திட்டி உள்ளார். இதில்தான் சண்டை ஆரம்பமாகி உள்ளது.

புகார்
வீட்டுக்கு யாரையும் கூப்பிட்டு வந்து தண்ணி அடிக்க வேண்டாம் என்று சொல்லியும் கணவன் கேட்கவில்லை. இப்போது துணி மாத்துவதை எட்டி பார்க்கும் அளவுக்கு விபரீதம் வந்துவிட்டதை உணர்ந்த மணிமேகலை, தன் அம்மா வீட்டில் புகார் சொல்ல, மணிமேகலையின் சகோதரர்கள் துரைப்பாக்கம் போலீசில் இது சம்பந்தமாக புகார் தந்துவிட்டனர்.

தகராறு
உடனே போலீசாரும் இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஸ்டேஷன் வரை விஷயத்தை கொண்டு போனது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் மணிமேகலையுடன் சண்டை போட்டார்.

காய்கறி வெட்டும் கத்தி
"எனக்கு என் ஃப்ரண்ட்ஸ்தான் முக்கியம். அவங்க என்ன கேட்டாலும் நீ செஞ்சுதான் ஆகணும். இஷ்டம் இருந்தா இந்த வீட்டில் இரு.. இல்லாட்டி போயிடு.. மரியாதையா போய் ஸ்டேஷனில் குடுத்த புகாரை வாபஸ் வாங்கு" என்று சொல்லி உள்ளார். இதற்கு மணிமேகலை மறுக்கவும் நேராக கிச்சனுக்கு போய் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, மணிமேகலையின் கழுத்து, மார்பு என பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.

கைது
மணிமேகலை ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்ததை பார்த்ததும், உதயகுமார் தப்பி ஓடிவிட்டார். இதற்கு பிறகுதான் பெங்களூருவில் பதுங்கி இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டுக்கு வந்து தண்ணி அடித்த நண்பர் பட்டாளங்களையும் தேடி வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications