கத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் சரணடைந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Husband murdered wife near poonamallee

    சென்னை: ரத்தம் சொட்ட சொட்ட கீழே பிணமாக விழுந்த சுமதியின் தலையை கத்தியால் அறுத்து எடுத்துள்ளார் கணவன் கிட்டப்பன்!

    பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். 35 வயதாகிறது. எலக்ட்ரீஷியனாக இருக்கிறார். கல்யாணம் ஆகி 9 வருடம் ஆகிறது. மனைவி பெயர் சுமதி. 2 குழந்தைகள் உள்ளனர்.

    husband murdered wife near poonamallee

    ஆனால் கொஞ்ச நாளாகவே சுமதி மீது கிட்டப்பனுக்கு சந்தேகம்.. சந்தேகம்.. சந்தேகம்..! இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுமதி குழந்தைகளை தூக்கி கொண்டு கடந்த பத்து மாசத்துக்கு முன்பு அவரது அம்மா வீட்டுக்கு போய்விட்டார். இவர்களுடைய சண்டைவிவகாரம் ஸ்டேஷன் வரையும் சென்றுவிட்டது. பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டு, அது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கிட்டப்பன் வீட்டிற்கு சுமதி சென்றிருந்தார். அங்கு போனதும் திரும்பவும் சந்தேகப்பட்டு சுமதியிடம் தகராறு செய்துள்ளார் கிட்டப்பன். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகம் ஆகவும், பக்கத்தில் கிடந்த சுத்தியால் சுமதியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் சுமதி ரத்தவெள்ளத்தில் அலறி துடித்து அங்கேயே பிணமாக சரிந்தார். ஆனால் கிட்டப்பனுக்கு ஆத்திரம் தீரவில்லை. கீழே விழுந்த சுமதியின் தலையை கத்தியால் அறுத்து எடுத்துள்ளார். அதற்குள் சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், கிட்டப்பன் தப்பி விட்டார்.

    இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்த துவங்கி உள்ளனர். இதனிடையே தலைமறைவான கிட்டப்பன் ஸ்டேஷனில் வந்து சரணடைந்துள்ளார். மனைவியை சுத்தியால் அடித்தும், கத்தியால் அறுத்தும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+