சென்னையில் வாகன சோதனையில் பெண்களின் கை பையை பார்த்து ஆடிப்போன போலீஸ்.. தப்பி ஓடிய கணவன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளம் ஜோடிகள் போலீஸை கண்டதும் வாகனத்தை விரட்டிக்கொண்டு தப்பி சென்றார்கள். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். அப்போது இளம் பெண்களை இறங்கிவிட்ட ஆண்கள், அப்படியே பைக்குடன் தப்பி ஓடிவிட்டனர்.. பெண்களின் கைப்பையில் குவாட்டர் பாட்டில்களாக இருந்தது.

சென்னையில் போலீசார் ஒவ்வொரு நாளும் இரவில் வாகன சோதனை நடத்துவது வழக்கம். இந்த வாகன சோதனையின் போது, மது அருந்திவிட்டு சுற்றுவோர், திருட்டு வாகனங்களில் சுற்றுவோர் அதிக அளவில் சிக்குவார்கள். அதேபோல் போலீசிடம் தப்பி சென்ற பழைய குற்றவாளிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சிக்குவது அடிக்கடி நடக்கும். இந்த சோதனையில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தாலும் போலீசின் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

Chennai Independence Day police

ஏனெனில் வாகனங்களில் வருபவர் யார், எங்கிருந்து வருகிறார். அந்த நேரத்தில் அவருக்கு என்ன வேலை என்பதை அறிவார்கள். இதன் மூலம் குற்றச்செயல்களை செய்வோர் அதிகமாக சிக்குவார்கள் என்பதால் சோதனை என்பது சாதாரணமானது. அதேநேரம் சுதந்திர தினம் மாதிரியான முக்கியமான நாட்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் வழக்கமான சோதனையைவிட மிக தீவிரமாக சோதனையில் ஈடுபடுவார்கள். ஹ

சென்னையில் உள்ள அத்தனை காவல் நிலையங்கள் சார்பிலும் கண்டிப்பாக இரவில் சோதனை நடத்துவார்கள். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்த காவல் நிலைய போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கவும், மதுஅருந்துவிட்டு சுற்றி விபத்து ஏற்படுத்துவதை தடுக்கவும் சோதனை செய்வார்கள். அப்படித்தான் சுதந்திர தினத்தையொட்டி நேற்று இரவு சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இளம் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது இளம் ஜோடிகள் வாகனங்களை நிறுத்தாமல் பைக்கில் வேகமாக சென்றார்கள். அப்போது உஷார் ஆன போலீசார், அவர்களை துரத்தி பிடித்தனர்.

அப்போது பைக்கில் வந்த ஆண்கள் பெண்களை இருவரையும் கீழே இறக்கிவிட்டனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் பைக்கில் இருவரும் தெறித்து ஓடினார்கள். இதனால் அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டனர். அப்போது அந்த பெண்கள் இருவரின் கைப்பையை வாங்கி போலீசார் சோதித்தனர். அதில் குவாட்டர் பாட்டில்கள் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது போலீசார், ஏன் எங்களை பார்த்ததும் ஓடுனீங்க என்று கேட்டார்கள். அதனால் கோபம் அடைந்த பெண்கள், பெண் போலீஸ் தான் சோதனை செய்ய வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம்.. எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் உங்களை பார்த்து ஓடவே இல்லை.. வீடியோ எடுக்குறீங்களா. எடுத்துக்கொள்ளுங்கள் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.. அப்போது போலீசார் நீங்கள் ஏன் அவர்களுடன் வந்தீர்கள் என்று கேட்டார்கள்..

அதற்கு அந்த பெண்கள், எங்கள் புருஷனுடன் நாங்கள் வராமல் வேறு யார் வருவார்கள் என்று பெண்கள் கூறினார்கள்.. அதற்கு போலீசார் ஏன் அவ்வளவு வேகமாக வர வேண்டும்.. அவருடன் வந்ததால் தானே கேட்கிறோம் என்றார்கள். இதனிடையே பெண் போலீசார் வந்து சோதனை செய்ததுடன், அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.. மனைவிகைளை விட்டு விட்டு சென்ற கணவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+